இன்னும் 2 வாரம் உள்ள நிலையில்….. மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

 

இன்னும் 2 வாரம் உள்ள நிலையில்….. மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைய இன்னும் 2 வாரம் உள்ளநிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

மக்களவை

தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டாம், தங்களது தொகுதிகளுக்கு சென்று கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுங்க என நேற்று முன்தினம் அந்த கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவுறுத்தினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (நேற்று) மட்டும் அவை நடவடிக்கையில் கலந்து கொள்வார்கள் என கட்சி தெரிவித்து இருந்தது.

மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷ்ஹான் ரெட்டி

இந்நிலையில் வழக்கமாக 11 மணிக்கு தொடங்கும் மக்களவை நேற்று மதியம் 2 மணிக்கு கூடியது. விமான பயண நேரங்கள் மாற்றப்பட்டதால் உறுப்பினர்கள் வருவது தாமதம் ஆனதே  இதற்கு காரணம். கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், மக்களவையில் நேற்று நிதி மசோதா 2020 நிறைவேற்றிய பிறகு, மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி கிஷ்ஹான் ரெட்டி 2 மசோதாக்களை அறிமுகம் செய்தார்.