இன்னிங்ஸ் வெற்றிக்கு பிளான்.. 347/9 என டிக்ளேர் செய்தது இந்தியா..!

இன்னிங்ஸ் வெற்றிக்கு பிளான்.. 347/9 என டிக்ளேர் செய்தது இந்தியா..!

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 241 ரன்கள் முன்னிலை பெற்று 347/9 என டிக்ளேர் செய்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 106 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 241 ரன்கள் முன்னிலை பெற்று 347/9 என டிக்ளேர் செய்துள்ளது.

ind vs ban

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 106 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த புஜாரா மற்றும் ரஹானே இருவரும் அரைசதம் கண்டனர். மறுமுனையில் நிலையை அடைய கேப்டன் விராட் கோலி சதம் விளாசினார். 

virat kohli

விராட் கோலி 132 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ரஹானே 51 ரன்கள், புஜாரா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருந்தது. மீதம் ஒரு விக்கெட் கைவசம் இருக்க இந்திய அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

வங்கதேச அணி சார்பில் அல் அமீன் மற்றும் எபடாட் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அபு ஜயத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 

வங்கதேச அணியை விட இந்திய அணி 241 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. 5 மணிக்கு மேல் வேகப்பந்து வீச்சிற்கு மைதானம் சாதகமாக இருப்பதால், திட்டமிட்டு விராட் கோலி விரைவிலேயே டிக்ளேர் செய்திருக்கிறார். முடிந்தவரை இன்று அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினால் நாளைய ஆட்டம் மிக எளிதில் முடிந்துவிடும் என்ற நோக்கில் இவ்வாறு செய்திருக்கிறார். போதுமானவரை இன்றே அனைத்து விக்கெட்டுகளையும் எடுப்பதே அவரது திட்டமாக இருப்பது தெரிகிறது.