இனி 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது…ஒரே பொய்யால் 75 லட்சத்தை ஆட்டையை போட்ட பலே திருடன்!

 

இனி 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது…ஒரே பொய்யால் 75 லட்சத்தை ஆட்டையை  போட்ட பலே  திருடன்!

அதை தன்னிடம் கொடுத்தால் 500 ரூபாய் நோட்டுகளாக  கமிஷன் அடிப்படையில் மாற்றி தருவதாக கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் எசனை பாப்பாங்கரை பகுதியைச் சேர்ந்தவர்  சுரேஷ். இவர் பண மோசடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு காவல்துறையால் குண்டர் சட்டத்தில் சிறை தண்டனைக்கு அனுபவித்தவர். சமீபத்தில் இவர் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். தற்போது பெரம்பலூர் ரோவர் வளைவு பாரதி நகரில் வசித்து வரும் இவர், 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வாங்கி அறிவிக்கப்போவதாக ஊருக்குள் புரளியை கிளப்பியுள்ளார். மேலும் அதை தன்னிடம் கொடுத்தால் 500 ரூபாய் நோட்டுகளாக  கமிஷன் அடிப்படையில் மாற்றி தருவதாக கூறியுள்ளார்.

moeny

இதை நம்பிய மதுரையைச் சேர்ந்த 42 வயதான சௌந்தரபாண்டியன், கார்த்திக்,  மும்மூர்த்தி, பிலிக்ஸ், லட்சுமணன், வினோத்குமார் உள்ளிட்ட 7 பேர், 2000 ரூபாய் நோட்டுக்களாக  78 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பெரம்பலூர்  மூன்று ரோடு பாலத்தின் கீழ் கொண்டு வந்து சுரேஷிடம் கொடுத்துள்ளனர். அதை வாங்கி கொண்ட  கொண்ட அவர் பாலத்தின்  மறுமுனையில் 500 நோட்டுகளுடன் பார்ட்டி காத்துகிட்டு  இருக்கு.. இதோ வந்துடுறறேன்  என்று கூறி அங்கிருந்து காரை  எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

money

நீண்ட நேரமாகியும் சுரேஷ் வராததால் சந்தேகமடைந்துள்ளனர்.  இதையடுத்து அவரைத் தேடி பிலிக்ஸ், லட்சுமணன், வினோத்குமார் உள்ளிட்ட 4 பேரும் ஒரு காரில் சென்றுள்ளார். ஆனால்  அவர்களும் திரும்பவில்லை. இதை தொடர்ந்து சௌந்திரபாண்டியன், கார்த்திக், மும்மூர்த்தி ஆகிய மூன்று பேரும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளனர். சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்த போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுரேஷை தேடி சென்ற பிலிக்ஸ், லட்சுமணன், வினோத்குமார் உள்ளிட்ட 4 பேரும்  என்ன ஆனார்கள் என்று என போலீசார் விசாரித்து வருகின்றனர்.