‘இனி பேச்சு இல்ல.. வீச்சு மட்டும் தான்’ அமெரிக்காவே எச்சரித்த ஈரான்..!

 

‘இனி பேச்சு இல்ல.. வீச்சு மட்டும் தான்’ அமெரிக்காவே எச்சரித்த ஈரான்..!

சவுதி அரேபியா எண்ணெய் ஆலை மீது தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இதற்கு இனியும் அமைதியாக இருக்க முடியாது. போருக்கு தயாராக இருக்கிறோம் என ஈரான் நாட்டு தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா எண்ணெய் ஆலை மீது தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இதற்கு இனியும் அமைதியாக இருக்க முடியாது. போருக்கு தயாராக இருக்கிறோம் என ஈரான் நாட்டு தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

saudi arabia

சவுதி அரேபியாவில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் சில எண்ணெய் கிணறுகளில் மீது ஆளில்லா விமானம் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதன் பின்னணியில் இருந்து ஈரான் தூண்டி விட்டதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இச்சம்பவம் குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்களையும் அமெரிக்க வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மாக் பாம்பியோ தொடர்ந்து ஈரான் மீது பல குற்றங்களை முன்வைத்து வருகிறார். மேலும் சில ஆதாரங்களுடன் விரைவில் சவுதி அரேபியா அரசிடம் தாக்குதல் தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்படும். பின்னர் அதை ஆராய்ந்து சவுதி அரேபியா முடிவெடுக்கும் என அமெரிக்க தரப்பு தெரிவித்தது. 

இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த ஈரான் அரசு, இந்த தாக்குதல் தனிப்பட்ட தாக்குதல்; இதன் பின்னணியில் ஈரானுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்ற வாதத்தை முன்வைத்து வந்தது. இதற்கிடையில் அமெரிக்க ராணுவத்தை எந்நேரமும் தயாராக இருக்கும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். 

iran

இதற்கு பதிலளித்த ஈரான் நாட்டு தலைவர் அயத்துல்லா அலி காமெனி, அமெரிக்கா ஈரான் மீது சுமத்தும் குற்றம் அடிப்படை ஆதாரம் கூட இல்லாதவை. முறையான ஆதாரம் இல்லாமல் தொடர்ந்து குற்றம் சாட்டுவது சற்று பொறுத்துக் கொள்ள இயலாதவை. இனியும் அமைதி காக்க இயலாது. ஈரான் அரசு எந்த நேரமும் போருக்கு தயாராக இருக்கிறது. அமெரிக்காவுடன் இனி எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. 

சவுதி அரேபியாவை தூண்டிவிட்டு ஈரானுக்கு அழுத்தம் ஏற்படுத்த அமெரிக்கா முடிவு செய்திருப்பது முதுகில் குத்தும் செயலாகும். இதற்கு எந்த விதத்திலும் ஈரான் பலியாகாது என்றார்.