இனி திருப்பதி லட்டுகள் சணல் பைகளில் கிடைக்கும்! திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!

இனி திருப்பதி லட்டுகள் சணல் பைகளில் கிடைக்கும்! திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!

திருப்பதி, திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் அழிப்பதற்கு திருமலை தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக இதுவரையில் பிளாஸ்டிக் பைகளில் கொடுத்து வந்த லட்டுகளுக்கு பதிலாக இனி திருப்பதி லட்டு பிரசாதங்களை சணல் பைகளில் கொடுக்கும் முயற்சியில் திருமலை தேவஸ்தானம் இறங்கியுள்ளது. 

laddu

உலகம் முழுவதும் இருந்து தினந்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆயிரக்கணக்காக பக்தர்கள் வெங்கடாஜலபதியை தரிசிப்பதற்காக வருகிறார்கள். அவர்களுக்கு லட்சக்கணக்கில் திருப்பதி லட்டுக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. சராசாரியாக தினமும் திருமலையில் 4 லட்சம் லட்டுக்கள் வரையில் விற்பனைச் செய்யப்படுகின்றன. இப்படி லட்டுகளை பக்தர்களுக்கு கொடுப்பதற்காக தினந்தோறும் 70,000 பிளாஸ்டிக் பைகளை தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். 
இந்நிலையில், தற்போது வழங்கிவரும் மக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகள், பேப்பர் பெட்டி, பேப்பர் பைகளுக்கு பதிலாக 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய அலுமினியம் முலாம் பூசப்பட்ட ‘சணல்’ பைகளில் இன்னும் சில மாதங்களில் லட்டு பிரசாதங்களைத் தருவதற்கு தேவஸ்தானம் தயாராகி வருகிறது.