இனி கலரான காஷ்மீர் பெண்களை கல்யாணம் செய்யலாம்- பா.ஜ. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு…

 

இனி கலரான காஷ்மீர் பெண்களை கல்யாணம் செய்யலாம்- பா.ஜ. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு…

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், இனி கலரான காஷ்மீர் பெண்களை கல்யாணம் செய்யலாம் என்று பேசிய பா.ஜ. எம்.எல்.ஏ. ஒருவரின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை வழங்கி வந்த 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை மத்திய அரசு நீக்கியது. மேலும், காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட உள்ளது. இதற்கான ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் பலத்த ஆதரவு உள்ளது.

மக்கள் ஆதரவு

உத்தர பிரதேசம் மாநிலம் முசாப்நகர் மாவட்டம் கடவுளியில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை பாராட்டி பா.ஜ.வினர் கூட்டம் ஒன்றை நடத்தினர். அந்த கூட்டத்தில் அந்த தொகுதியின் பா.ஜ. எம்.எல்.ஏ. விக்ரம் சைனி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், காஷ்மீரை சேர்ந்த பெண் ஒருவர் உத்தரபிரதேச இளைஞரை கல்யாணம் செய்து கொண்டால் அந்த பெண்ணின் காஷ்மீர் குடியுரிமை நீக்கப்படும். இந்தியா மற்றும் காஷ்மீருக்கு வித்தியாசமான குடியுரிமை இருந்தது.

காஷ்மீர் பெண்கள்

இங்குள்ள முஸ்லிம் தொண்டர்கள் கொண்டாட வேண்டும். இனி அங்கு கலரான காஷ்மீர் பெண்ணை கல்யாணம் செய்யலாம். அங்கு கொண்டாட்டங்கள் நடக்கிறது. இந்து அல்லது முஸ்லிம் உள்பட ஒவ்வொரும் கட்டாயம் கொண்டாட வேண்டும். இதனை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என பேசினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.