இனி எம்ஜிஆர் இந்தியக் குடிமகன் இல்லையா..! என்ன சொல்கிறது குடியுரிமைச் சட்டம்?

இனி எம்ஜிஆர் இந்தியக் குடிமகன் இல்லையா..! என்ன சொல்கிறது குடியுரிமைச் சட்டம்?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அடைக்கலம் கேட்டு வந்தவர்களில் யாருகெல்லாம் இந்திய குடியுரிமை உண்டு என்று ஒரு பட்டியல் இட்டிருக்கிறார்கள்
அதில் இந்துக்கள், கிறிஸ்த்தவர்கள்,ஜைனர்கள் , சீக்கியர்,பார்சிகள் உட்பட்ட பல மதத்தினர் இருக்கிறார்கள், இஸ்லாமியர் பெயர் இல்லை.அதுதான் இன்றைய போராட்டங்களுக்கு காரணம்.

அடுத்தது என்.சி.ஆர் என்கிற பெயரில் இந்தியக் குடிமக்களைக் கணக்கெடுக்கப் போகிறார்கள்.அதில் இடம்பெற உங்கள் அப்பா இந்தியாவில்தான் பிறந்தார் என்று நிரூபிக்க வேண்டும்.அப்பாவின் பிறப்புச்சான்றிதழ் இல்லாவிட்டால் ஏதாவத் சொத்துப் பதிவு பாத்திரங்கள் இருந்தாலும் காட்டலாம்,என்கிறார்கள்.

இந்தியாவின் பிரதமர் படித்த கல்லூரியையும்,அவரது டிகிரி சர்டிஃபிகேட்டையுமே கண்டு பிடிக்க முடியாத நாட்டில் அப்பாக்களின் பர்த் சர்டிஃபிகேட்டை எங்கே தேடுவது?. இதிலும்,அப்படி நிரூபிக்க முடியாத இந்துக்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்து குடியுரிமை பெறலாம் என்கிறது சட்டம்.

image

இந்த என்.சி.ஆர் விவகாரத்தில்தான் எம்ஜிஆர் பெயர் அடிபடுகிறது. அவரும், அவருடைய அண்ணன் சக்கரபாணியும் பிறந்தது இலங்கை.கண்டியில் இருந்து 38 கி.மீ தொலைவில் இருக்கும் நவலிபட்டியா என்கி இடத்தில் இருந்த ஒரு தேயிலை தோட்டத்தில்,தேயிலை தொழிலாளர்கள் வாழும் ‘ லைன்’ வீடொன்றில் 1917-ம் ஆண்டு ஜனவர் 17-ம் தேதி பிறந்தவர் எம்ஜிஆர். அவர் இந்து என்றாலும் இலங்கையில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு அமித்ஷா குடியுரிமை தரமாட்டார்.இதனால் ஒரு இந்திய மொழியில் சூப்பர்ஸ்டார் நடிகர்,பிறகு அதே மாநிலத்தின் முதல்வர் என்பது மட்டுமல்ல,இந்திய அரசின் மிகஉயர்ந்த விருதான பாரதரத்னா விருதும் பெற்ற வெளிநாட்டவர் என்கிற பெருமைகளை அடைகிறார்.

mgr

இதில் இன்னொரு சட்ட சிக்கலும் இருக்கிறது. அது அதிமுக என்கிற கட்சியே ஒரு அயல்நாட்டவர் அதுவும் இந்தியக் குடிமகன் அல்லாத ஒருவர் ஆரம்பித்தது என்று ஆகிவிடுமே, அப்போது அதிமுக கலைக்கப்படுமா என்கிற கேள்வியும் எழும்.அயல் நாட்டவரான எம்ஜிஆர் ஆண்டபோது போட்ட உத்தரவுகள்,போட்ட சட்டங்கள் என்னாகும்.என்றெல்லாம் நிறைய அபத்தமான கேள்விகள் எழும். ஆனால் எம்ஜிஆரின் அப்பா பிறந்தது என்பதற்கு சட்டபூர்வ ஆதாரமிருக்கிறது

menon

. அது கேரளாவில் அப்போதைய கொச்சி ராஜியத்தில் நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பு. கொச்சி ராஜியத்திற்கு உட்பட்ட குன்னங்குளம் அருகில் இருந்த ஒரு நம்பூதிரி ( அந்தர்ஜனம்)பெண் விபச்சாரம் செய்ததாக வழக்கு வருகிறது. அந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட நம்பூதிரி பெண்மணி நம்பூதிரி முதல் நாவிதர் வரை 16 ஆண்களுடன் தனக்கு உறவிருந்ததாக ஒப்புக்கொண்டார். அந்த 16 பேரில் ஒருவர் நல்லேபுள்ளி மேலகத்து கோபால மேனன். திருச்சூரில் நீதித்துறை அதிகாரி.மனைவி இரிஞ்ஞாலக்குடாவைச் சேர்ந்த வட்டப்பரம்பில் மீனாட்சியம்மாள்.

image

கொச்சி மகாராஜா ஸ்ரீ ராமவர்மாவின் பேஷ்கார் இந்த வழக்கில் அளித்த தீர்ப்பின் படி அந்த நம்பூதிரி பெண் சாலக்குடி அருகில் ஒரு தனிவீட்டில் சிறை வைக்கப்பட்டார்.கோபால மேனன் உட்பட்ட அந்த 16 பேரும் தேச பிரஷ்டம், ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டனர்.அதாவது இனி அவர்களுக்கு நாடும் ஜாதியும் சொந்தமில்லை.இதனால் அங்கிருந்து பாலக்காடு மாவட்டம் மருதூர் வந்து வாழ்ந்தபோது சத்தியபாமா என்கிற ஈழ பெண்ணை மணந்துகொண்டார்

mgr

. அங்கிருந்து இலங்கை வந்த கோபாலன் சத்யபாமா தம்பதியினர் கண்டி நவலிப்பட்டியா தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்த போதுதான் சக்கரபாணியும்,ராமச்சந்திரனும் பிறந்தார்கள்.எம்ஜிஆரின் தந்தை தொடர்பான வழக்கு ஆவணங்கள் இன்னும் பத்திரமாக  பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ளன.இந்த வழக்கின் தீர்ப்பு ஜுன் 27 ம் தேதியிட்ட மலையாள மனோரமா நாளிதழிலும் வெளிவந்து இருக்கிறது.