இனி ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவைக்கட்டணம் வசூல்!

 

இனி ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவைக்கட்டணம் வசூல்!

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டது. 

நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு  செய்தால் ஜிஎஸ்டியுடன் சேர்த்து சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. 

train

ரயில் டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுவதற்கு நாளை முதல் மீண்டும் சேவைக்கட்டணம்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று  ஆண்டுக்கு முன் ஏசி இல்லாத வகுப்புக்கு ரூ.20. ஏசி வகுப்புக்கு ரூ.40 சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டது. 

train

இந்நிலையில் தற்போது மீண்டும் சேவைக்கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் நாளை முதல்  ஆன்லைனில் ஏசி இல்லாத வகுப்பு டிக்கெட்டுக்கு 15 ரூபாயும்,  ஏசி வகுப்புக்கு 30 ரூபாயும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அத்துடன் ஜிஎஸ்டி கட்டணமும் பெறப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.