இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி? நிபுணர்கள் முன்னறிவிப்பு…

 

இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி? நிபுணர்கள் முன்னறிவிப்பு…

பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள், அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் போன்றவை இந்த வார பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி கடந்த ஜூன் மாதத்தில் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது. மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளை அன்னிய முதலீ்ட்டாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து பேசினர். சூப்பர் ரிச் உயர்வு கட்டணத்தை திரும்ப பெறுவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர்கள் பேசினர். இது தொடர்பாக எந்தவொரு முன்னேற்றம் ஏற்பட்டாலும் அது பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பங்குச் சந்தை நிலவரம்

கடந்த ஜூலை மாதத்தின் சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் நாளை வெளிவருகிறது. அந்த மாதத்தின் மொத்த விலை பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரம் புதன்கிழமை வருகிறது. இந்த வாரம் மதர்சன் சுமி, முத்தூட் பைனான்ஸ், ஐ.எப்.சி.ஐ. போன்ற பிரபல நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் வெளிவருகிறது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் மேலும் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தை

இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, அன்னிய முதலீட்டாளர்களின் நிலைப்பாடு, காஷ்மீர் நிலவரம் போன்றவை பொறுத்தே இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கம் இருக்கும் என  பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்தனர்.