இந்த வாரம் திரைக்கு வரும் 4 படங்கள் என்னென்ன தெரியுமா? 

 

இந்த வாரம் திரைக்கு வரும் 4 படங்கள் என்னென்ன தெரியுமா? 

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கோலிவுட் திரையுலகில் குறைந்தது நான்கு திரைப்படங்கள் வெளியாகும்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கோலிவுட் திரையுலகில் குறைந்தது நான்கு திரைப்படங்கள் வெளியாகும். அந்த வகையில் இந்த வாரம் செப்டம்பர் 6ம் தேதி நான்கு திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது. அவை ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘மகாமுனி’ மற்றும் ‘ஜாம்பி.

எனை நோக்கி பாயும் தோட்டா: 

நடிகர் தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் 3 வருடங்களுக்குப் பிறகு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதால் கண்டிப்பாக இந்த படம் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

enpt

 

சிவப்பு மஞ்சள் பச்சை:

ஜிவி பிரகாஷ் – சித்தார்த் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை ‘பிச்சைக்காரன்’ படத்தை இயக்கிய  இயக்குனர் சசி இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் மோட்டார் ரேஸ் இளைஞராகவும் சித்தார்த் டிராபிக் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். சென்னையில் சட்டவிரோதமாக பைக்ரேஸில் ஈடுபடும் இளைஞர்களால் ஏற்படும் விபரீதங்களை அடிப்படியாக வைத்து உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை இந்த படம் பெரும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

sivappu

மகாமுனி: 

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மெளனகுரு பட இயக்குநர் மெளனகுரு இயக்குநர் சாந்தகுமார் இயக்கியுள்ளார். ஆர்யா நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளிவந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதால் இந்த படம் அவர் பயணத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

magamuni

ஜாம்பி:

நடிகர் யோகி பாபு மற்றும் யாஷிகா இணைந்து நடித்துள்ள இந்த படம் நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. 

zombie

இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகும் இந்த நான்கு படத்தில் எந்த படம் வெற்றியடைகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.