இந்த வருஷம் வாய்ப்பு குறைவு… அடுத்த ஆண்டு உறுதி… சந்திரயான் 3 குறித்து கே.சிவன் தகவல்

 

இந்த வருஷம் வாய்ப்பு குறைவு… அடுத்த ஆண்டு உறுதி… சந்திரயான் 3 குறித்து கே.சிவன் தகவல்

சந்திரயான் 3யை இந்த வருஷம் நிலவுக்கு அனுப்பவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உறுதியாக நடைபெறும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

நிலவில் தரையிறங்கும் முயற்சியான சந்திரயான் 2 கடந்த ஆண்டு கடைசியில் நேரத்தில் தோல்வியில் முடிவடைந்தது. இருப்பினும் மனம் தளராத இஸ்ரோ சந்திரயான் 3 திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த ஆண்டு சந்திரயான் 3 நிலவுக்கு ஏவப்படும் மத்திய விண்வெளி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஆனால் இந்த ஆண்டு வாய்ப்புகள் குறைவு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உறுதியாக சந்திரயான் 3 நிலவுக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோ

இஸ்ரோ தலைவர் கே சிவன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது: சந்திரயான் 3யை இந்த ஆண்டில் நிலவுக்கு அனுப்ப முயற்சி செய்து வருகிறோம். ஆனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செலுத்துவதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக உள்ளது. சந்திரயான் 3 திட்டத்துக்கு மொத்தம் ரூ.615 கோடி செலவாகும். இதில், லேண்டர், ரோவர் மற்றும் உந்துவிசை தொகுதி ஆகியவற்றுகாக ரூ.250 கோடியும், சந்திரயான் 3யை நிலவுக்கு ஏவுவதற்கான செலவினம் ரூ.365 கோடியும் அடங்கும்.

ககன்யான்

இந்த ஆண்டு சந்திரயான் 3, ககன்யான் உள்பட 25 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு மொத்தம் 30 திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டோம். ஆனால் 13 திட்டங்களை மட்டுமே செயல்படுத்தினோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.