இந்த ராசிக்காரங்க எல்லாம் காதலால் மகிழ்ச்சி அடைவார்கள்!

 

இந்த ராசிக்காரங்க எல்லாம் காதலால் மகிழ்ச்சி அடைவார்கள்!

இன்று உங்களுடன் ஆதரவாகச் செயல்படுவார்கள். இன்று உங்களுக்கு நிதானம் தேவை.

டிசம்பர் 05, 2019 வியாழக்கிழமை
கார்த்திகை 19, விகாரி வருடம்
நல்ல நேரம்
காலை 10.45 மணி முதல் 11.45 வரை
ராகு காலம்
பிற்பகல் 1.30 மணி முதல்  3 வரை
எமகண்டம்
காலை 6 மணி முதல்  7.30 வரை

மேஷம்

உங்களுக்கு பணத் தேவை ஏற்படும். அதனால்  பணத்தை முடிந்தவரைச் சேமித்து வையுங்கள்.   பிசினஸ் பார்ட்னர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நிலுவையில் உள்ள பணிகளை ஒன்று சேர்ந்து செய்தால்  வெற்றி நிச்சயம். இன்று உங்கள் காதல் வாழ்வு மிகவும்  சுவை உடையதாக இருக்கும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 3

ரிஷபம்

உங்களின் முதலீடுகள் மற்றும்  லட்சியங்களில்  ரகசியம் காக்கவும்.  மாறிவரும் காலகட்டத்திற்கு ஏற்ப உங்களை மாற்றி கொள்ளுங்கள்.  உங்களின் இல்லற வாழ்வு இனிமை மிகுந்தது என்பதை  உணர்ந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்குச் சிரிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம்

இன்று உங்கள் நம்பிக்கை உடையும். கிரகத்தின் நட்சத்திர நிலை இன்று உங்களுக்கு சாதகமாக இல்லை. உங்கள் பணத்தை மிகவும் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் பதற்றமான சூழ்நிலை ஏற்படலாம். இன்று உங்களுக்குக் கவனமும் நிதானமும் தேவை. 

அதிர்ஷ்ட எண்: 1

கடகம்

உங்கள் உறவில் இதுவரை இருந்த குழப்பங்களும் சிக்கல்களும் தீரும்.  இது உங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை தரும்.  இந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் கொண்டாடுவீர்கள்.   உங்களது திட்டம் இன்று எதிர்பாராத அன்பரின் வருகையால் தடைப்படும். இன்று மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம்

பிறரை குற்றம் சொல்லி நீங்கள் சிக்கலில் சிக்கிவிடாதீர்கள். உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள். இதனால் மன உளைச்சல் ஏற்படும். நீண்ட காலமாகப் பதவி உயர்வு காத்திருப்போருக்கு இன்று நல்ல செய்தி கிடைக்கும். இன்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்: 3

கன்னி

பிசினஸில் ஈடுபடுவோர் நெருக்கமானவர்களின் ஆலோசனையை உதாசீனப்படுத்தாதீர்கள். மற்றவர்களின் நம்பிக்கையையும் பெறுவதற்கு இது நல்ல காலம். பணியிடத்தில் சிக்கல் ஏற்படலாம். அவசரப்படாமல் அமைதியாக இருந்து கண்காணியுங்கள். இன்று உங்களுக்கு கவனம் தேவை. 

அதிர்ஷ்ட எண்: 1

துலாம்

நிலுவையில் உள்ள சில விஷயங்களில் உடனடியாக முடிவெடுங்கள். அதே சமயம் விளைவு எதுவாக இருந்தாலும் ஏற்க தயாராக இருங்கள். இன்று குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். இன்று உங்களுக்கு பணிவு தேவை.

அதிர்ஷ்ட எண்: 3

விருச்சிகம்

உங்கள் அழகான தோற்றம் பிறருடைய கவனத்தை ஈர்க்கும். இன்று உங்கள் துணை மீது கொண்ட காதலை அனைவரும் உணர்வார்கள். அந்தளவிற்கு உங்களின் ரொமான்ஸ் அபரிவிதமான ஆனந்தத்தைக் கொடுக்கும். ன்பான தொடுதல், முத்தங்கள், அணைப்பு இவை அனைத்தும் உங்கள் துணையிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும். இது மிக அழகான மற்றும் சிறப்பான நாளாகும். 

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு

பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். ஏனென்றால் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கும். பணியிடத்தில் சிலருக்கு பாராட்டு மழை பொழியும். முதலீடுகள் செய்தவர்களுக்கு எதிர்பாராத நற்செய்தி காதுக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு ஊடல்கள் வந்து போகும்.

அதிர்ஷ்ட எண்: 2

மகரம்

உங்களின் வேகமான செயல்பாட்டால் உத்வேகம் அதிகரிக்கும்.  சிலர் உங்களிடம் கடன் கேட்க வாய்ப்புள்ளது. அவர்களின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்வது நல்லது. இல்லையென்றால் பணத்தை இழக்க நேரிடும். எதிர்கால திட்டங்களைத் திட்டமிடும் நாள். 

அதிர்ஷ்ட எண்: 2

கும்பம்

குடும்பத்தினரின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். நெருங்கிய நண்பரின் தவறான ஆலோசனையால்  உங்கள் பிசினஸில் சிக்கல் உண்டாகலாம். இருப்பினும்  உங்கள் குடும்பத்தினர் இன்று உங்களுடன் ஆதரவாகச் செயல்படுவார்கள். இன்று உங்களுக்கு நிதானம் தேவை.

அதிர்ஷ்ட எண்: 9

மீனம்

இன்று உங்கள் நகரக்கூடிய சொத்து  திருடு போகக்கூடிய நிலை ஏற்படலாம். கவனமாக இருங்கள்.பல வேலைகள் விட்டுவிட்டு உங்கள் மனதுக்குப் பிடித்த வேலையை இன்று செய்வீர்கள். மனதில் உள்ள குழப்பங்கள் மற்றும் சந்தேகங்கள் தீரும் நாள்

அதிர்ஷ்ட எண்: 7