இந்த ராசிக்காரங்க எல்லாம் காதலால் வருத்தப்படுவாங்க!

 

இந்த ராசிக்காரங்க எல்லாம் காதலால் வருத்தப்படுவாங்க!

மனநிலை நன்றாக இருப்பதாகத் தெரியவில்லை என்பதால் விஷயங்களை முறையாகக் கையாளுங்கள். 

8.11.2019 (வெள்ளிக்கிழமை)
நல்ல நேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
காலை 10.30 மணி முதல் 12 வரை
எமகண்டம்
பிற்பகல் 3 மணி முதல் 4.30 வரை
சந்திராஷ்டமம் – மகம், பூரம்
பரிகாரம் –  வெல்லம்
மேஷம்
 உங்களை பலிகடாவாக ஆக்க சிலர் முயற்சிப்பார்கள் என்பதால் கவனமாக இருங்கள். அழுத்தமும் டென்சனும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள். உங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி பெருகும்.
அதிர்ஷ்ட எண்: 4
ரிஷபம் 
நல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். வீட்டு வேலைகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். ஒரு சமயத்தில் ஒரு படி என முக்கிய மாற்றங்களைச் செய்தால், நிச்சயமாக வெற்றி உங்களுக்கே. உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 5
மிதுனம் 
உங்களுடைய பாசிட்டிவ் எண்ணம் மற்றும் நம்பிக்கையால் உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். மகிழ்ச்சியான – சக்திமிக்க – காதல் மன நிலையில் – உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும். 
அதிர்ஷ்ட எண்: 7
கடகம் 
முந்தைய முயற்சிகளின் மூலம் கிடைக்கும் வெற்றி உங்கள் நம்பிக்கையை உயர்த்தும். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதற்கு குழந்தைகளுக்கு தூண்டுதல் கொடுங்கள். ஆனால் அவர்கள் முயலும் போது அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்களின் ஊக்கம் நிச்சயமாக அவர்களின் எண்ணத்துக்கு உற்சாகம் தரும். 
அதிர்ஷ்ட எண்: 3
சிம்மம் 
சமீபகாலமாக வெறுப்பான உணர்வு தோன்றினால் இன்றைக்கு சரியா நடவடிக்கைகளும் சிந்தனைகளும் உங்களுக்குத் தேவையான நிவாரணத்தை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செலவிட நேரம் கிடைக்கும். காதலால் பின்னர் வருத்தப்பட நேரிடும். வேலையில் இன்று மிக அருமையான நாளாகவே இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 6
கன்னி 
உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது மகிழ்ச்சி நிறைந்த நாள். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். மனைவியுடன் ஷாப்பிங் செல்வது உடனடி மகிழ்ச்சி தரும். உங்களுக்கு இடையில் புரிதலை அதிகரிக்கவும் அது உதவும். இன்று உங்கள் வாழ்வில் உண்மையான காதலை இழப்பீர்கள். கவலைப்படாதீர்கள். எல்லாமே காலப்போக்கில் மாறும். 
அதிர்ஷ்ட எண்: 3
துலாம் 
வீட்டில் வேலை செய்யும்போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஏதாவது பொருள்களை கவனக் குறைவாக கையாண்டால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமித்திடுங்கள். உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினை இருக்கும் – ஆனால் சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். தனிமையில் சிக்குவீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 7
விருச்சிகம் 
உங்கள் உற்சாகத்தை அதிகரிக்க மனதில் அழகான, மதிப்புமிக்க படத்தை பதிய வையுங்கள். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். நாளின் பிற்பகுதியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைத் தரும். காதல் விவகாரம் பற்றி டமாரம் அடிக்க வேண்டாம். 
அதிர்ஷ்ட எண்: 1
தனுசு 
அளவுக்கு அதிகமான கவலை மன அமைதியைக் கெடுக்கும். ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 3
மகரம் 
போதிய ஓய்வு எடுக்காமல் இருந்தால் மிகுந்த களைப்பாக உணர்வீர்கள். உங்களுக்கு கூடுதல் ஓய்வு தேவைப்படும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். வேலையில் நீங்கள் அதிகம் கவனமாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் புறக்கணிக்கப்படும். உங்கள் துணைவரின் மனநிலை நன்றாக இருப்பதாகத் தெரியவில்லை என்பதால் விஷயங்களை முறையாகக் கையாளுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 1
கும்பம் 
உங்களின் பர்சனாலிட்டி வாசனை திரவியம் போல இன்று செயல்படும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். ஒரு குழந்தையின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். உங்கள் இருவருக்குமுள்ள உறவு மேஜிக்கலாக மாறுவதை நீங்கள் உணரும் நாளிது. 
அதிர்ஷ்ட எண்: 1
மீனம் 
மோதலை தவிர்த்திடுங்கள், அது உங்கள் உடல்நலனை கெடுக்கும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். குடும்பத்தினர்களுடன் அமைதியான சாந்தமான நாளை அனுபவித்திடுங்கள். யாராவது பிரச்சினைகளுடன் உங்களை அணுகினால் அவர்களைப் புறக்கணித்திடுங்கள். உங்கள் மனதை இது பாதிக்க அனுமதிக்காதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 9