இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு! ரசிகர்களை சுண்டியிழுக்கும் ஹன்சிகாவின் GIF

 

இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு! ரசிகர்களை சுண்டியிழுக்கும் ஹன்சிகாவின் GIF

அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் படம், 50-வது படம் ‘மஹா’.நாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. காதல் முறிவுக்குப் பிறகு சிம்பு – ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் இது என்பதால் பரபரப்பாகப் பேசப்பட்டது. கோவாவைச் சேர்ந்த ஒரு விமானியின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மஹா படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்நிலையில் படப்பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில் வீட்டில் இருந்தபடியே ஹன்சிகா, அவருக்கான GIF ஒன்றை தயார் செய்து இருக்கிறார். இது அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ஹன்சிகா அதில் இந்த GIF-ஐ நம்முடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த GIF க்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் இது அதிகமாக பகிரப்பட்டும் வருது.