இந்த முறை பிக் பாஸ் வீடு எப்படியிருக்கும் தெரியுமா? இதோ உங்களுக்கான அந்த எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்

 

இந்த முறை பிக் பாஸ் வீடு  எப்படியிருக்கும் தெரியுமா? இதோ உங்களுக்கான அந்த எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் புது வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக  பரவி வருகிறது. 

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் புது வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக  பரவி வருகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவ்வில் மிகவும் பிரபலமானது பிக் பாஸ். இரண்டு சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் வரும் 23ம் தேதி முதல் துவங்கவுள்ளது. அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரும் நிலையில் தொடங்கியுள்ளது. 

மற்றொரு பக்கம் இந்த முறை பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்துருகின்றனர்.  இந்த நிலையில் கடந்த இரண்டு சீசன் போல் இல்லாமல் இந்த முறை சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக சில மாற்றங்கள் செய்துள்ளனர். 

பிக் பாஸ் 3

அந்த வகையில் பிக்பாஸ் 2-வது சீசனில் அமைக்கப்பட்டிருந்த ஜெயில்லில் பாத்ரூம் இருக்காது ஆனால் இந்த முறை பதிலாக பாத்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல தண்ணீர் பிரச்சனை, இயற்கையைப் பாதுகாப்பது போல அக்கறையுள்ள விதமாகவும் சில செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமில்லாமல் லாரி மாடலில் கிச்சன், சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ போன்ற அலங்கார பொருட்கள் என பிக்பாஸ் வீடு முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த முறை பொழுதுபோக்கிற்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

அந்த வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது… இதோ உங்களுக்காக அந்த எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்… 

பிக் பாஸ் 3பிக் பாஸ் 3பிக்பாஸ் பிக்பாஸ் பிக்பாஸ் பிக்பாஸ்