இந்த முறையும் கோஹ்லி தான் டாப்.. சறுக்களில் ரோகித்! ஐசிசி தரவரிசை பட்டியலில் வெளியீடு

 

இந்த முறையும் கோஹ்லி தான் டாப்.. சறுக்களில் ரோகித்! ஐசிசி தரவரிசை பட்டியலில் வெளியீடு

டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி முடிவுற்ற பிறகு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் மற்றும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. 

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 928 புள்ளிகளுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். மற்ற இந்திய வீரர்களான புஜாரா 4வது இடத்திலும், அஜிங்கிய ரஹானே ஆறாவது இடத்திலும் உள்ளனர். 

ரோகித் சர்மா

முதலிடத்தில் இருந்து வந்த ஸ்டீவ் ஸ்மித் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் சரிவர ஆடாததால் 911 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலேயே இருக்கிறார். 

பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலை பார்க்கையில், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய வீரர் பும்ரா காயம் காரணமாக சில போட்டிகளில் ஆடாததால், ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து இரண்டாவது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆறாவது இடத்திலும் இருக்கின்றனர். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் 476 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில், 120 புள்ளிகளுடன் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.