இந்த மாதிரி நல்ல மனசுக்காரங்க‌ இருக்குற சென்னையிலயா மழை பெய்யமாட்டேங்குது!!!

 

இந்த மாதிரி நல்ல மனசுக்காரங்க‌ இருக்குற சென்னையிலயா மழை பெய்யமாட்டேங்குது!!!

பெற்றோர்களால் கைவிடப்பட்ட ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் குழந்தைகள் ஒவ்வொருவராக சாலமனிடம் வந்துசேர்கிறார்கள். எனவே, சென்னை செங்குன்றம் பகுதியில் தனியாக இடத்தைப் பிடித்து குழந்தைகளை வளர்க்க துவங்கினார். இப்போது 45 குழந்தைகள் அவரிடம் உள்ளனர். ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் வேறு, எய்ட்ஸ் வேறு என்பதை வாசகர்கள் நினைவுகொள்ளவேண்டும்

சென்னையைச் சேர்ந்த சாலமன் ராஜாவுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. சரி, நமக்கு கொடுப்பினை இல்லை என நினைத்து ஏதேனும் குழந்தையை தத்தெடுக்கலாம் என நினைக்கும்போதே, ஒன்றுக்கு இரண்டாக குழந்தைகள் சற்று காலதாமதமாக வந்துசேர்ந்தனர். தத்தெடுப்புக்கு தேவையில்லாமல் போனது. ஆனாலும், சாலமன் மனதில் ஏதோ சஞ்சலம் தொடர்ந்தது. இந்நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை ஒன்றைப்பற்றி அவருடைய நண்பர்மூலம் தகவல் தெரியவருகிறது சாலமனுக்கு. எதுவும் யோசிக்காமல், உடனடியாக அக்குழந்தையை தான் தத்தெடுத்துக்கொள்வதாக கூறியதோடு நின்றுவிடாமல், அக்குழந்தையை எடுத்து வளர்க்க துவங்கினார்.

Solomon with his 45 children

அதன்பின்னர், பெற்றோர்களால் கைவிடப்பட்ட ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் குழந்தைகள் ஒவ்வொருவராக சாலமனிடம் வந்துசேர்கிறார்கள். எனவே, சென்னை செங்குன்றம் பகுதியில் தனியாக இடத்தைப் பிடித்து குழந்தைகளை வளர்க்க துவங்கினார். இப்போது 45 குழந்தைகள் அவரிடம் உள்ளனர். ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் வேறு, எய்ட்ஸ் வேறு என்பதை வாசகர்கள் நினைவுகொள்ளவேண்டும். இன்றைக்கு உலக தந்தையர் தினத்தை கொண்டாடும் எந்த ஒரு தந்தையைவிடவும், சாலமன் ராஜா ஒருவர் கொண்டாடும் தந்தையர் தினத்துக்கு ஆழமான, அடர்த்தியான அர்த்தம் உண்டு.