இந்த மாதிரியான ஆட்கள் மேல பயமும் கிடையாது… மரியாதையும் கிடையாது! கமல்ஹாசன் ஆவேசம்.

 

இந்த மாதிரியான ஆட்கள் மேல பயமும் கிடையாது… மரியாதையும் கிடையாது! கமல்ஹாசன் ஆவேசம்.

ஏங்க கொஞ்சமாச்சும் அறிவு வேணாமா? எங்க பேனர் வெக்கணும் எங்க வைக்க கூடாதுனு தெரியாதா?. இவர்களை போன்ற அலட்சிய அதிகாரிகளாலும் அரைவேக்காட்டு அரசியல் வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர் போக போகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுபஸ்ரீ என்ற பெண், சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனை கண்டித்து பல தலைவர்களும் பிரபலங்களும் தங்களுக்காக பேனர் வைக்க கூடாது என்று தெரிவித்திருந்தனர். உச்ச நீதிமன்றமும் அதிகார பூர்வமான ஒப்புதல் இல்லாமல் பேனர் வைப்பதற்கு தடை விதித்தது. 

Kamal Haasan

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இத்தைகைய செயல்களை எதிர்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ” மிகப் பெரிய கொடுமை என்ன தெரியுமா? வாழ வேண்டிய பிள்ளைகளின் மரணத்தை பெத்தவங்களிடம் தெரிவிப்பது. சுபஸ்ரீயின் மரண செய்தியும் அப்படித் தான். தன் பெண்ணோட ரத்தம் சாலையில் சிந்திக் கிடப்பதை பார்க்கும் போது பெத்தவங்களுக்கு மட்டுமல்ல, எல்லார்க்கும் திகிலும் மரண வலியும் கண்டிப்பாக வரும் . பெண்களை பெத்தவன் என்ற முறையில எனக்கும் அப்படித் தான் இருந்தது. இந்த மாதிரி பல ரகுக்களும், சுபஸ்ரீக்களும் அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் கொல்லப்படுகின்றனர். ஏங்க கொஞ்சமாச்சும் அறிவு வேணாமா? எங்க பேனர் வெக்கணும் எங்க வைக்க கூடாதுனு தெரியாதா?. இவர்களை போன்ற அலட்சிய அதிகாரிகளாலும் அரைவேக்காட்டு அரசியல் வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர் போக போகிறது. 

Kamal haasan

எதிர்த்து கேள்வி கேட்டா ஏறி மிதிக்கிறது. தப்ப தட்டி கேட்டா நாக்கை அறுத்துடுவேன்னு மிரட்டுறது தானா இவங்களுக்கு தெரிந்த அரசியல். இந்த மாதிரி ஆட்கள் மேல எனக்கு மயிரிழை அளவும் கூட மரியாதையோ, பயமோ கிடையாது. ஒரு வேலை உங்களுக்கு பயமிருந்தால் என் கையை பிடித்துக் கொள்ளுங்கள். மக்கள் நீதி மய்யம் உங்கள் சார்பாக அந்த தவறுகளை தட்டி கேட்டு தீர்வும் தேடி தர முற்படும்.

 

எங்களை ஆளுறவங்கள நாங்க தான் தேர்வு செய்வோம். ஆனா நாங்க காலம் முழுதும் அடிமையா தான் இருப்போம்னு சொன்னா அதை விட பைத்தியக்காரத் தனம் எதுவுமே கிடையாது. சாதாரண மக்கள் என்று சொல்லி சொல்லியே அடிமையாக வைத்திருக்கிறார்கள். சாதாரண மக்கள் தான் அசாதாரணமான தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நான் நம்புகிறேன். வாருங்கள் தவறுகளை தட்டி கேட்போம், புதிய தலைமுறையை உருவாக்குவோம்” என்று கூறி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.