”இந்த பூமியில் வாழ்ந்ததற்கு வாடகையாக தனது படைப்புகளை விட்டுச்சென்றுள்ளார் மகேந்திரன்”-பாரதிராஜா

 

”இந்த பூமியில் வாழ்ந்ததற்கு வாடகையாக தனது படைப்புகளை விட்டுச்சென்றுள்ளார் மகேந்திரன்”-பாரதிராஜா

”எதிர்காலச் சந்ததியினருக்குப் பாடமாக இந்தத் தலைமுறையினர் கற்றுக்கொள்வதற்குப் பாடமாக ஏராளமான படைப்புகளை விட்டுச் சென்றுள்ள மகத்தான கலைஞன் இயக்குநர் மகேந்திரன். அவரது இழப்பு என்றென்றைக்கும் ஈடு செய்ய இயலாதது” என்று தனது இரங்கச் செய்தியில் தெரிவித்துள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

”எதிர்காலச் சந்ததியினருக்குப் பாடமாக இந்தத் தலைமுறையினர் கற்றுக்கொள்வதற்குப் பாடமாக ஏராளமான படைப்புகளை விட்டுச் சென்றுள்ள மகத்தான கலைஞன் இயக்குநர் மகேந்திரன். அவரது இழப்பு என்றென்றைக்கும் ஈடு செய்ய இயலாதது” என்று தனது இரங்கச் செய்தியில் தெரிவித்துள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

mahendran

மகேந்திரன் மறைவுச் செய்தி அறிந்தவுடன் அவரது இல்லத்திற்குச் சென்ற பாரதிராஜா, அனைவர் முன்னிலையிலும் ஒரு குழந்தையைப்போல் மகேந்திரன் சடலத்தின் அருகே நின்றுகொண்டு  கதறி அழுதார். ஒரு கட்டத்தில் மகேந்திரனின் உறவினர்கள்  பாரதிராஜாவுக்கு ஆறுதல் சொல்லவேண்டிய நிலையே ஏற்பட்டுவிட்டது. துக்க நிகழ்வுக்கு வந்த அனைவரிடமும் மகேந்திரனின் அருமைகளைப் பேசித்தீர்த்தபடியே இருந்த பாரதிராஜா, பின்னர் சம்பிரதாயத்திற்காக ஒரு இரங்கல் அறிக்கையும் வெளியிட்டார்.

அதில்,’சம்பிரதாயமாக சடங்குகளுக்காக சில அறிக்கைகள் விடுவது சில இழப்புகளுக்குப் பதில் சொல்வது என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. சில இழப்புகள் பூமியில் ஈடுசெய்யமுடியாத இழப்புகள் என்று வார்த்தைகளில் சொல்லலாம். குறிப்பாக திரைப்படத்துறையில் சத்யஜித்ரே, சாந்தாராம், ஸ்ரீதர், பாலசந்தர், பாலுமகேந்திரா போன்றவர்களின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது.இவர்கள் வரிசையில் மகேந்திரனின் இழப்பும் ஈடு செய்ய இயலாதது.

எதிர்காலச் சந்ததியினருக்குப் பாடமாக இந்தத் தலைமுறையினர் கற்றுக்கொள்வதற்குப் பாடமாக ஏராளமான படைப்புகளை விட்டுச் சென்றுள்ள மகத்தான கலைஞன் இயக்குநர் மகேந்திரன். அவரது இழப்பு என்றென்றைக்கும் ஈடு செய்ய இயலாதது.

பத்திரிகைத்துறையில் இருந்தவர், எம்.ஜி.ஆர். மூலம் திரைப்படத்துறைக்கு வந்தவர்,சிவாஜியின் ‘தங்கப்பதக்கம்’ படத்துக்கு கதை,வசனம் எழுதியவர் என்று எத்தனயோ பெருமைகளுக்குச் சொந்தக்காரர். 50 ஆண்டுகாலமாக என் படங்களை ரசித்தவர். அவர் படங்களை ரசித்தவன் நான். இன்று அவரது சடலத்தைப் பார்க்கிறபோது நெஞ்சு விம்முகிறது. அதனால்தான் தொலைக்காட்சிகளில் பேட்டிகள் கேட்டபோது பேசமுடியாமல் ஓடி வந்துவிட்டேன்.

mahendran

இந்த பூமியில் வாழ்ந்ததற்கு வாடகையாக தனது படைப்புகளை விட்டுச்சென்றுள்ளார் மகேந்திரன்.தமிழ்கூறும் நல்லுலகம் இருக்கும் வரை அவரது ஆன்மாவும் படைப்புகளும் நிரந்தரமாக தமிழர்தம் நெஞ்சில் குடியிருக்கும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் பாரதிராஜா.

இதையும் படிங்க: நேர்கொண்ட பார்வை அப்டேட்: தல ரசிகர்கள் உற்சாகம்!