இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜி.எஸ்.டி. கொண்டு வந்தது…… சுப்பிரமணியன் சுவாமி அதிரடி…

 

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜி.எஸ்.டி. கொண்டு வந்தது…… சுப்பிரமணியன் சுவாமி அதிரடி…

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தது என பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அதிரடியாக பேசியுள்ளார்.

ஹைதராபாத்தில் நேற்று “இந்தியா-20230க்குள் ஒரு பொருளாதார வல்லரசு” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா, முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு வழங்க வேண்டும்.

நரசிம்ம ராவ்

நரசிம்ம ராவ் அமைச்சரவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தார். 1990ல்களில் பல்வேறு சீர்திருத்தங்களை நரசிம்ம ராவ் அமல்படுத்தினார். அதன் பிறகு அவ்வப்பபோது நாம் 8 சதவீத வளர்ச்சியை எட்டினோம். நரசிம்ம ராவ் கொண்டு வந்த சீர்திருத்தங்களை நாம் மேம்படுத்தவில்லை. அவற்றை நாம் இப்போது செய்ய வேண்டும். உங்கள் கேள்வி என்னவென்றால் 10 ஆண்டுகளில் 2030க்குள் பொருளாதார வல்லரசாக இருப்போமா? நிச்சயமாக நம்மால் முடியும்.

ஜி.எஸ்.டி.

நீங்கள் 10 சதவீத வளர்ச்சியை விரும்புகிறீர்கள். அப்படி என்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலீட்டு விகிதம் 3.7 சதவீதமாகவும், 3.7 சதவீதம் உங்களது செயல்திறன் காரணியாகவும் இருக்க வேண்டும். அது இன்றுள்ள 5 சதவீதமாக இருக்க கூடாது. முதலீட்டாளர்களை வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி.யால் பயமுறுத்த வேண்டாம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தது. ஜி.எஸ்.டி. மிகவும் குழப்பமானது மற்றும் எந்த இடத்தில் எந்த படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை. மேலும் ஜி.எஸ்.டி. விண்ணப்பங்களை அப்லோடு செய்ய கம்ப்யூட்டர் தேவை. ராஜஸ்தான், பர்மர் ஆகிய பகுதிகளிலிருந்து சில வருவர். எங்களுக்கு மின்சார வசதி இல்லை அப்புறம் எப்படி நாங்கள் அப்லோட் செய்ய முடியும் என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.