இந்த தேதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்; மீனவர்களுக்கு வானிலை ஆய்வுமைய இயக்குனர் எச்சரிக்கை

 

இந்த தேதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்; மீனவர்களுக்கு வானிலை ஆய்வுமைய இயக்குனர் எச்சரிக்கை

மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று அதற்கு ஆம்பன் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் 20 ஆம் தேதி பங்களாதேஷ் பகுதியில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யாது என்றும் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ttn

இந்நிலையில் இது குறித்து பேசிய வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன், வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது என்றும் இது தற்போது ஒரிசாவில் இருந்து சுமார் 1,100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது என்றும் இன்று மாலைக்குள் இது புயலாக வலுப்பெறலாம் என்றும் கூறினார். தொடர்ந்து வரும் 18 மற்றும் 19 ஆம் தேதி  மேற்கு வங்க கடற்கரையை நோக்கி  நகரும் என்றும் தெரிவித்தார். அதனால் மீனவர்கள் 16,17 தேதிகளில் தெற்கு வங்க கடலிலும், 17,18 தேதிகளில் மத்திய வங்க கடலிலும், 19,20 தேதிகளில் வடக்கு வங்க கடலிலும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.