‘இந்த கொரானா பண்ண கொடுமைய பாருங்க ‘-வருமானமில்லாததால் ஆட்டோ ஓட்டுனரை தற்கொலைக்கு தூண்டிய கொரானா ..

‘இந்த கொரானா பண்ண கொடுமைய பாருங்க ‘-வருமானமில்லாததால் ஆட்டோ ஓட்டுனரை தற்கொலைக்கு தூண்டிய கொரானா ..

தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதால் உலகளவில் பல துறைகளில் வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மிக மோசமான பாதிப்புக்குள்ளானவர்கள் அன்றாடம் வேலைக்குச் சென்று சம்பாதித்து வாழும் தினக்கூலிகள்தான். கொரானா பரவல் எதிரொலியாக மக்கள் பயணத்தை தவிர்த்ததால் வருமானமின்றி தவித்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் பெங்களூரில் வியாழக்கிழமை தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

auto-drivers-89

பெங்களூரு ஆர்.டி.நகர் போஸ்டில் உள்ள மோதி கார்டன்ஸில் வசிப்பவர் சிவகுமார் (24) என்ற ஆட்டோ ட்ரைவர், சிவகுமாரின் குடும்பம் கிட்டத்தட்ட ரூ .4 லட்சம் கடனுக்கு ஆளாகியுள்ளது. அந்த குடும்பத்திற்கு ஒரே ஒரு சொத்து ஆட்டோ மட்டுமே இருந்தது. அதுவும் அவரது மதுவுக்கு அடிமையான மூத்த சகோதரரால் அடமானம் வைக்கப்பட்ட  ஆட்டோ.

அந்த ஆட்டோவை சிவகுமார்  மீட்டு  அதை ஓட்டத் தொடங்கினார். ஆனால் கொரானா அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கியதால் அவரது வருமானம் தடைபட்டு ஆட்டோவுக்கு தவணை கட்ட முடியவில்லை. பிப்ரவரி 29 அன்று அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நாள் முன்பு, அவரது சகோதரி ஆட்டோவுக்கு தவணை கட்டாததை கண்டித்தார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.