இந்த ஆண்டு பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய 10 நிகழ்வுகள்…..

 

இந்த ஆண்டு பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய 10 நிகழ்வுகள்…..

மீண்டும் மோடி வெற்றி, ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு உள்பட இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய டாப் 10 நிகழ்வுகள் குறித்து பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

1.கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க. பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி மத்தியில் ஆட்சியை தக்கவைத்து கொண்டது. பா.ஜ.க.வின் பங்குச் சந்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த மே 20ம் தேதி வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எல்லாம் மீண்டும் பா.ஜ.க.தான் ஆட்சி வரும் தெரிவித்தன. இதனால் அன்றைய தினம் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1422 புள்ளிகள் (3.75 சதவீதம்) உயர்ந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான மே 23ம் தேதி சென்செக்ஸ் 0.76 சதவீதம் குறைந்தது.

பா.ஜ.க.

 2.பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கிலும் பெருநிறுவனங்களான வரியை மத்திய அரசு குறைத்தது. 3.ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியை மத்திய அரசு வழங்க ஒப்புக்கொண்டது. நிதி பிரச்சினையில் சிக்கி தவித்த மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியின் உபரி நிதி பெரிய உதவியாக இருந்தது. இதுவும் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 4.இந்த ஆண்டில் இதுவரை ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை 1.35 சதவீதம் குறைத்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி

5.கடந்த செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவு 4.5 சதவீதமாக குறைந்தது. 6.இந்த ஆண்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு இருண்ட காலம். இந்த ஆண்டு வாகன விற்பனை தொடர் சரிவை சந்தித்தது. 7.சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரம் காரணமாக, கடந்த செப்டம்பர் காலாண்டில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் பெரிய நஷ்டத்தை கணக்கு காட்டின.

வாகன விற்பனை

8.அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் சர்வதேச அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.  9.யெஸ் பேங்க் விவகாரம் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சீனா-அமெரிக்கா வர்த்தக போர்

10.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் முழு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவித்தார். அதேசமயம் பெரும் கோடீஸ்வரர்களுக்கான சர்சார்ஜ் உயர்த்துவது மற்றும் அன்னிய நிதி முதலீட்டாளர்கள் ஈட்டும் மூலதன லாபத்துக்கு வரி உள்ளிட்டவை பரிந்துரை செய்யப்பட்டன. இதனையடுத்து அன்னிய முதலீட்டாளாகள் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புக்கு பங்குகளை திரும்ப பெற்றனர். அவர்களுக்கு சர்சார்ஜ் கிடையாது என மத்திய அரசு விளக்கம் கொடுத்த பிறகே அவர்கள் மீண்டும் இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கினர்.