இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை

 

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை

இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் குமுறிக் கொண்டிருந்த கிரகடாவ் என்ற எரிமலை சில கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெடித்துச் சிதறியது. இதையடுத்து, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுந்தா ஜலசந்தியை ஒட்டிய கடற் கரை பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சம்பவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.