இந்தோனேசியாவில் சுனாமி: 222ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை; பொதுமக்கள் அச்சம்!

 

இந்தோனேசியாவில் சுனாமி: 222ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை; பொதுமக்கள் அச்சம்!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் பலியோனோரின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் பலியோனோரின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் கிரகட்டோவா என்ற நீருக்கு அடியில் இருந்த எரிமலை வெடித்ததால் நேற்றிரவு 9.30 மணியளவில் அங்கு சுனாமி ஏற்பட்டது. இதன் காரணமாக அந்நாட்டின் சுந்தா ஸ்ட்ரைட், பண்டங்க்ளாங், செராங், மற்றும் தெற்கு லம்பூங் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த சுனாமியில் சிக்கி, காலை 11 மணி நிலவரப்படி 43 பேர் பலியாகி இருந்தனர். அதன்பின் அந்நாட்டு அரசு தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. இதில், 600-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். 

இந்நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, 430-க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்து உள்ளன. இந்த பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தோனேசியாவில் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.