இந்து நோயாளிக்கு ரத்ததானம் செய்ய ரம்சான் விரதத்தை கைவிட்ட இஸ்லாமியர்.

இந்து நோயாளிக்கு ரத்ததானம் செய்ய ரம்சான் விரதத்தை கைவிட்ட இஸ்லாமியர்.

‘பனாலுல்லா’ அஹமது அஸ்சாம் மாநிலம் மங்கல்டோயைச் சேர்ந்தவர்.கடந்த செவ்வாய் கிழமைவரை ரம்சான் நோன்பு நோற்றுக்கொண்டு இருந்தார். ஆனால்,அவருக்கு வந்த தொலைபேசி அவரை,மதமா, மனிதாபிமானமா என்று சிந்திக்கவைத்து விட்டது.ஒரு உயிரைக்காப்பதற்காக தன் நோன்பை கைவிட்டார் அஹமது.

ramzan fasting

அகமதுவின் ரூம்மேட்டும் ,உடன் பணியாற்றுபவருமான த’பாஷ் பகவதி’க்கு அன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அஸ்சாமின் தமாஜி மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சன் கோகை என்பவருக்கு அவசரமாக பி.பாஸிடிவ் ரத்தம் தேவை என்றது அந்த தொலைபேசி செய்தி.

blood donation

கவுகாத்தி நகரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் புற்று நோய் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரஞ்சன் கோகைக்கு ரத்தம் தேவைப்பட அவரது உறவினர்கள் பல குருதிக்கொடையாளர்களை தொடர்புகொண்டு ஏமாந்த நிலையில்தான் அகமது அந்த முடிவுக்கு வந்தார்.

தனது ரம்சான் நோன்பை கைவிட்டு உடனடியாக ரஞ்சனுக்கு உதவ விரும்பி தன் உறவினர்களிடம் சொன்னபோது,ரத்ததானம் செய்தால் உடல் பலவீனமாகிவிடும் விரதத்தை கைவிடு என்ற அவர்களது கருத்தை ஏற்று, அந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்று ரத்ததானம் செய்திருக்கிறார். 

அகமது,தபாஷ் இருவருமே ‘ டீம் ஹுமானிட்டி’ என்கிற பிரபல முகநூல் குழுவில் இனைந்து ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.