இந்துக்கள் எல்லாம் வெளியே வாங்க: ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு

 

இந்துக்கள் எல்லாம் வெளியே வாங்க: ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு

திமுகவில் இருந்து இந்துக்கள் அனைவரும் வெளியே வர வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசியிருக்கிறார்

மதுரை: திமுகவில் இருந்து இந்துக்கள் அனைவரும் வெளியே வர வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசியிருக்கிறார்.

தாமிரபரணி மஹா புஷ்கரணி விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட பல்வேறு ரதங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டன. இதில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

தமிழகத்தில் இந்து பண்டிகை எது நடந்தாலும் இருந்தாலும் அதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. திமுக இந்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமாகி விட்டது. தற்போது திமுக., கம்யூனிஸ்ட்கள், மனித நேய மக்கள் கட்சி, மதிமுக., என பல கட்சிகள் மாவட்ட ஆட்சியரிடம் சென்று தாமிரபரணி புஷ்கரம் நடத்தக் கூடாது என்று மனு கொடுத்தார்கள். இது இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை. இதனால் திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். திமுக கட்சியில் உள்ள இந்துக்கள் எல்லோரும் அந்த கட்சியில் இருந்து வெளியில் வர வேண்டும் என்றார்.