இந்தி வெறியர்களை துரத்தி துரத்தி வெளுக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!

 

இந்தி வெறியர்களை துரத்தி துரத்தி வெளுக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!

ரஹ்மானும் விடாமல் பதிலடியாக ட்வீட் ஒன்றை போட்டிருக்கிறார். அதில், தன்னாட்சி (Autonomous) என்ற வார்த்தையையும், அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்புக்கான லிங்க்கையும் பதிவு செய்திருக்கிறார். இது சர்வநிச்சயம் இந்தி வெறியர்களுக்கான பதிலடி என்பது மட்டும் தெளிவாக தெரிந்தாலும், யாருக்கான என்பதில் மட்டும் துல்லியம் இல்லை. சும்மா கிடந்த சிங்கத்தை சொரிந்துவிட்டுவிட்டார்கள், அது கர்ஜிக்க தொடங்கியிருக்கிறது.

சும்மாவே மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் தமிழகத்துக்கும் ஏழாம் பொருத்தம். அப்படி இருக்கும்போது, நேரங்கெட்ட நேரத்துல இந்தி கட்டாயம் என மத்திய அரசுக்கு ஏதோ ஒரு வேலையத்த குழு பரிந்துரை செய்ய, கன்டென்ட் கிடைக்காமல் தவித்துவந்த தமிழ் இணையவாசிகளுக்கு ஃபுல் மீல்ஸ் கிடைக்கவே, வச்சு செய்தார்கள் மத்திய அரசை. எந்தளவுக்கு என்றால், பரிந்துரை வெளியான அடுத்த நாளே மத்திய அரசு தானாகவே முன்வந்து அதனை நீக்கும்படி செய்யுமளவுக்கு.

AR Rahman Tweet

சரி, இதுல ஏ.ஆர். ரஹ்மான் எங்கே வந்தார்?  மத்திய அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரை ரத்து செய்யப்பட்ட தகவல் வெளியானபோதே, ஏ.ஆர். ரஹ்மான் அதனை வரவேற்று ‘அருமையான செய்தி’ என ட்வீட் செய்திருந்தார். பின்னும், அவருடைய இசையில் பஞ்சாபி பாடகர் ஒருவர் தமிழ் பாடல் ஒன்றை பாடுவதை ட்வீட் செய்யவும், இந்திக்காரர்களுக்கு கிளர்ந்தெழுந்து விட்டது. ஏதோ உள்குத்து நடந்திருக்கும்போல ரஹ்மானை வம்பிழுத்து. ‘இசையமைப்பாளர்தானே, ரெண்டு மூணு பேரு ஒண்ணா இன்பாக்ஸ்ல ஒரண்டைய இழுத்தா பயந்திடுவார்’ என நினைத்து  ஏதோ செய்திருப்பார்கள் போல.

ரஹ்மானும் விடாமல் பதிலடியாக ட்வீட் ஒன்றை போட்டிருக்கிறார். அதில், தன்னாட்சி (Autonomous) என்ற வார்த்தையையும், அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்புக்கான லிங்க்கையும் பதிவு செய்திருக்கிறார். இது சர்வநிச்சயம் இந்தி வெறியர்களுக்கான பதிலடி என்பது மட்டும் தெளிவாக தெரிந்தாலும், யாருக்கான என்பதில் மட்டும் துல்லியம் இல்லை. சும்மா கிடந்த சிங்கத்தை சொரிந்துவிட்டுவிட்டார்கள், அது கர்ஜிக்க தொடங்கியிருக்கிறது. நீ கலக்கு சித்தப்பு!