இந்தி மொழியின் ஆதிக்கத்தினை தான் எதிர்க்கிறோம், இந்தியை அல்ல-மு.க.ஸ்டாலின்

 

இந்தி மொழியின் ஆதிக்கத்தினை தான் எதிர்க்கிறோம், இந்தியை அல்ல-மு.க.ஸ்டாலின்

இந்தி மொழியின் ஆதிக்கத்தினை தான் எதிர்க்கிறோம், இந்தியை அல்ல என மொழிப்போர் வீரவணக்க கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்

சென்னை: இந்தி மொழியின் ஆதிக்கத்தினை தான் எதிர்க்கிறோம், இந்தியை அல்ல என மொழிப்போர் வீரவணக்க கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழகத்தில் நடந்த 1965-ம் ஆண்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. பல உயிர்களை பலி கொண்ட அந்த போராட்டம் போராட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போராட்டத்தின் போது  உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. அந்தவகையில் சென்னையில் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், இந்தி மட்டுமின்றி எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் அல்ல. இந்தி மொழியின் ஆதிக்கத்தை தான் எதிர்க்கிறோம். எந்த மொழிக்கும் தமிழ் மொழியை போன்ற உணர்வுப் போராட்டம் நடைபெற்றது கிடையாது என்றார்.

அதேபோல், சென்னை கே.கே.நகரில் அதிமுக சார்பில் நடைபெற்ற நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி, எதற்காகவும் தமிழ் மொழியை விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழ் மொழியை அதிமுக காக்கும். பிற மொழியை ஒருவர் மீது திணிப்பது தவறு. மொழிதான் மனித வாழ்வின் இதயம். பேசும் மொழியை வைத்தே ஒரு மனிதரை அறிய முடியும். இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போர் போராட்டத்தை நாம் போற்றுவோம் என்றார்.