இந்திய ராணுவப்படையை கவுரவிக்க பாகிஸ்தான் பாடலை காப்பியடித்த பாஜக எம்.எல்.ஏ!

 

இந்திய ராணுவப்படையை கவுரவிக்க பாகிஸ்தான் பாடலை காப்பியடித்த பாஜக எம்.எல்.ஏ!

பாகிஸ்தானின் தேசிய நாள், அன்று பாகிஸ்தான் பாதுகாப்பு படையை கவுரவிக்கும் வகையில் ‘பாகிஸ்தான் சிந்தாபாத்’ என்ற பாடல் வெளியிடப்பட்டது

தெலங்கானா: இந்திய ராணுவ வீரர்களை கவுரவிக்க பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் போட்ட பாடல், பாகிஸ்தான் பாதுகாப்பு படைக்காக போடப்பட்ட பாடலை ஒத்திருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி புரோமோ வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றிய ராஜா சிங், என் புதிய பாடல் ராம நவமியை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி காலை 11.45 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலை நம் இந்திய ராணுவப்படைக்கு சமர்பிக்கிறேன் என பதிவு செய்திருந்தார். இந்த பாடல் பாகிஸ்தான் பாதுகாப்பு படையை கவுரவிக்க போடப்பட்ட பாடல் போல் உள்ளது என கூறப்படுகிறது.

மார்ச் 23-ஆம் தேதி பாகிஸ்தானின் தேசிய நாள், அன்று பாகிஸ்தான் பாதுகாப்பு படையை கவுரவிக்கும் வகையில் ‘பாகிஸ்தான் சிந்தாபாத்’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. அதைப்போலவே உள்ளது ராஜா சிங் வெளியிட்ட பாடல், இது பாகிஸ்தானியர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் இதனை ரீடிவீட் செய்து, காப்பியடித்ததில் மகிழ்ச்சி. ஆனால் உண்மையை பேசுவதற்கு காப்பியடிங்கள், பாகிஸ்தான் சிந்தாபாத் என பதிவு செய்தார்.

ஆசிப்

இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு பேட்டியளித்த ராஜா சிங், நான் பாகிஸ்தான் பாடலை கேட்டது கூட கிடையாது. அவர்கள் என்ன பாடல் போட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு எப்படி தெரியும். ஒவ்வொரு ராம நவமிக்கும் நாங்கள் பாடல் போடுவது வழக்கம், ஒருவேளை அவர்கள் என் பாடலை காப்பி அடித்திருக்கலாம் என்றார்.

சிங்

அதுமட்டுமல்லாது வன்மத்தை விதைக்கும் விதமாக ராஜா சிங், பாகிஸ்தான் போன்ற தீவிரவாத நாடு கூட பாடகரை கொண்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. பாகிஸ்தான் பாடகர்கள் வேண்டுமானால் என் பாடலை காப்பியடித்திருக்கலாம், பாகிஸ்தான் போன்ற தீவிரவாத தேசத்திடம் இருந்து நாங்கள் எதையும் காப்பியடிக்க வேண்டிய அவசியமில்லை என பதிவு செய்துள்ளார்.

இதையும் வாசிங்க

சுட்டுக் கொல்லப்படும் இளைஞர்கள்; டெல்லியில் சைக்கோ கொலைகாரன் நடமாட்டம்?!..