இந்திய ராணுவத்தில் காஷ்மீர் பெண்கள் சேர்ப்பு! உற்சாகமாக குவிந்த காஷ்மீர் பெண்கள்!

 

இந்திய ராணுவத்தில் காஷ்மீர் பெண்கள் சேர்ப்பு! உற்சாகமாக குவிந்த காஷ்மீர் பெண்கள்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ கடந்த ஆக.5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ஜம்மு – காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றியமைக்கப்பட்டன. இதையடுத்து காஷ்மீரில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ கடந்த ஆக.5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ஜம்மு – காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றியமைக்கப்பட்டன. இதையடுத்து காஷ்மீரில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஜம்மு – காஷ்மீரில் ரயில் சேவைகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன.

kashmir women

தற்போது 144 தடை உத்தரவு நீக்கப்பட்டாலும், இணைய சேவை போன்றவைகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று ஜம்மு காஷ்மீரில், இந்திய ராணுவத்திற்காக எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிவதற்கு காஷ்மீர் பெண்களைத் தேர்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான காஷ்மீர் பெண்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டார்கள். அப்படி எல்லை பாதுகாப்பு படைக்கு தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு ஜம்மு – காஷ்மீர் பகுதிகளிலேயே பணிபுரிவதற்கு வாய்ப்புகள் தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஜம்மு – காஷ்மீர் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் தீவிரவாதப் பாதைக்கு செல்லாமல் தடுக்கும் வகையில் அவர்களுக்கும் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிவதற்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.