இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம்

 

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம்

இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்தில் நிறைவடைந்தன.

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்தில் நிறைவடைந்தன. 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் உலக பங்குச்சந்தைகளின் ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்தில் முடிந்தன.

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 196.62 புள்ளிகள் உயர்ந்து 35,457.16 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 65.50 புள்ளிகள் உயர்ந்து 10,682.20 புள்ளிகளில் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் தொலைத்தொடர்புத் துறை பங்குகள் அதிக லாபம் ஈட்டின. நிஃப்டி பங்குச்சந்தையில் பாரதி ஏர்டெல் 9%, வோடஃபோன் ஐடியா 16%, டாடா கம்யூனிகேஷன்ஸ் 6% லாபம் ஈட்டின.

யெஸ் வங்கி சி.இ.ஒ தேர்வுக் குழுவிலிருந்து பதவி விலகியதால், நிஃப்டி பங்குச்சந்தையில் யெஸ் வங்கி 7% சரிந்து அதிக நஷ்டத்தில் முடிவடைந்தது.