இந்திய குடிமகளாக எனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய குற்றம் இது! கொந்தளித்த அப்போலோ ஆஸ்பத்திரி வாரிசு!?

 

இந்திய குடிமகளாக எனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய குற்றம் இது! கொந்தளித்த அப்போலோ ஆஸ்பத்திரி வாரிசு!?

ஹைதராபாத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற அவரிடம், அவரது வாக்கு நீக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஹைதராபாத்: தனது வாக்கு நீக்கப்பட்டு விட்டதாக அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியின் மகள் ஷோபனா காமினேனி ஆவேசம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, ஆந்திரா, தெலங்கானா உள்பட 18 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டபேரவைகளுக்கும் இதனுடன் சேர்த்து தேர்தல் நடைபெறுகிறது.

elections

அதன்படி, ஆந்திரா மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கும், தெலங்கானா மாநிலத்தில் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

அந்த வகையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்த அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியின் மகள் ஷோபனா காமினேனி, ஜனநாயகக் கடமையாற்றும் பொருட்டு வாக்களிக்க இந்தியா வந்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற அவரிடம், அவரது வாக்கு நீக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

elections

இதனால் ஆவேசமடைந்த அவர், எனது வாழ்நாளில் இந்திய குடிமகளாக இது மோசமான நாளாகும். நான் ஒட்டு போடுவதற்காக வெளி நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். எனது வாக்கு நீக்கப்பட்டுள்ளது. எனது வாக்கு முக்கியமில்லையா? இந்திய குடிமகளாக எனக்கு எதிராக் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய குற்றம் இது. என்னால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது, இதே வாக்குச்சாவடியில் தாம் வாக்களித்ததாகவும் ஷோபனா தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலமான ஆந்திராவில் பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால், மறு வாக்குப்பதிவு கோரி தேர்தல் ஆணையத்துக்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

வாக்குப்பதிவு எந்திரத்தை தூக்கி போட்டு உடைத்த வேட்பாளர்: ஆந்திராவில் பரபரப்பு !