இந்திய இயக்குனர்களுக்கு சவால் விடும் ‘ட்ரான்ஸ்’ மலையாள பட விமர்சனம். 

 

இந்திய இயக்குனர்களுக்கு சவால் விடும் ‘ட்ரான்ஸ்’ மலையாள பட விமர்சனம். 

கன்னியாகுமரிக் காரணான விஜு பிரசாத் ஒரு மோட்டிவேஷனல் பேச்சாளன்.அதில் தோற்று மும்பைக்கு போய் கூரியர் கம்பனியில் வேலைபார்க்கும் அவனை,அழைத்து பயிற்சி கொடுத்து ‘பாஸ்ட்டர் ஜோஷ்வா கார்ல்ட்டன்’ ஆக்குகிறது இயக்குநர் கெளதம் மேனன் தலைமையிலான மாஃபியா கேங்!. 

ஃபகத் பாசில் நடிப்பில் அன்வர் ரஷீத் இயக்கி இருக்கும் இந்தப் படம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்!. மலையாளத்தில் தவிர வேறு எந்த மொழியிலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத கதை.இந்த ஆண்டு உலகெங்கும் பேசப்படும் படமாக இதுதான் இருக்கப்போகிறது.

கன்னியாகுமரிக் காரணான விஜு பிரசாத் ஒரு மோட்டிவேஷனல் பேச்சாளன்.அதில் தோற்று மும்பைக்கு போய் கூரியர் கம்பனியில் வேலைபார்க்கும் அவனை,அழைத்து பயிற்சி கொடுத்து ‘பாஸ்ட்டர் ஜோஷ்வா கார்ல்ட்டன்’ ஆக்குகிறது இயக்குநர் கெளதம் மேனன் தலைமையிலான மாஃபியா கேங்!. 

இயக்குநர் கெளதம் மேனன்

பாஸ்ட்டர் பயிற்சி அளிக்கும் அவராச்சன் ( திலீஷ் போத்தன் )” நானாடா நிண்டெ ஜீஸ்ஸ் கிரைஸ்ட்,நீன் என் அடிமை” என்கிற போது திரையில் தீ பிடிக்கிறது.அதன் பிறகு கெளதம் மேனன் ஏற்பாட்டால்,ஜோஷ்வா கார்ல்டன் குருடர்களைப் பார்க்க வைக்கிறான்,முடவர்களை நடக்க வைக்கிறான்.மதபோதகர்கள் எப்படி இயங்குகிறார்கள்.மக்களின் மூட நம்பிக்கைகளை எப்படி பணமாக்குகிறார்கள் என்று மிகுந்த எள்ளலுடன் சொல்கிறது படம்.

ஜோஷ்வா கார்ல்டன் ஜே.சி என்று அழைக்கப்படுகிறான்.அதாவது ஜீஸஸ் கிரைஸ்ட்! குறியீடெல்லாம் இல்லை நேராக வசனமே வைத்து இருக்கிறார்கள்.இந்தப் படத்தை இயக்கித் தயாரித்து இருக்கும் அன்வர் ரஷீதின் வளர்ச்சி அபாரமானது.மம்முட்டியை வைத்து ராஜமாணிக்கம்,மோகன்லாலை வைத்து சோட்டா மும்பை என படு லோக்கலான மசாலாக்களில் துவங்கியவர்.உஸ்தாத் ஓட்டலில் கவனம் ஈர்த்தார்,இந்தப்படம் எந்த இந்திய இயக்குநரும் நெருங்க முடியாத இடத்துக்கு அன்வரை உயர்த்தி விட்டது. 

trance

குடும்பத்தில் தொடர்ந்து  நடக்கும் தற்கொலைகளால் துவண்டு மும்பைக்குப் போய் ஏசுவின் நற்செய்தியாளன் ஆகி,கெளதம் மேனன் கூட்டத்தை எதிர்க்கத் துணிவது என்று படத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் ஃபகத் ஃபாசிலின் எனர்ஜி லெவல் ஏறிக்கொண்டே போகிறது.இதில் சாதா நாகர்கோவில்காரன் விஜு பிரசாத்தை, தேவசெய்தியாளன் ஆக்கும் ட்ரைனராக வரும் திலீஷ் போத்தன் மட்டுமே ஃபகத்துடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார்.வின்சென்ட் வடக்கன் என்கிற இந்தப் படத்தின் திரைகதையை எழுதியவருக்கும்,அனவருக்கும்,இந்தப்படத்துக்கும்  உலக அரங்கில் பல அவார்டுகள் காத்திருக்கின்றன.சவுண் டிசைன் ரசூல் பூக்குட்டி,கேமரா அமல் நீரத் ஆகியோர் படத்தை  உலகத்தரத்துக்கு உயர்த்தி இருக்கிறார்கள்.எங்கே,எந்த இந்திய இயக்குநராவது இந்தப்படத்தின் ரைட்சை வாங்கி ரீமேக் செய்யுங்களேன் பார்ப்போம்.