இந்திய அளவில் டிரெண்டான நேர்கொண்ட பார்வை: மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள்!

 

இந்திய அளவில் டிரெண்டான நேர்கொண்ட பார்வை: மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள்!

நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் டிவிட்டரில் இந்தியா அளவில் டிரெண்டாகியுள்ளது.

இந்திய அளவில் டிரெண்டான நேர்கொண்ட பார்வை: மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள்!

நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் டிவிட்டரில் இந்தியா அளவில் டிரெண்டாகியுள்ளது.   

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பெண்கள் குறித்த சமூகத்தின் பார்வையை  மாற்றி அமைக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை இன்று வெளியாகியுள்ள நிலையில் டிவிட்டரை ஆக்கிரமித்துள்ளது.  இந்தியா அளவிலான டிவிட்டரில் #NerKondaPaarvaiFromToday, #NerKondaPaarvaiFdfs, #NKPFestivalBegins ஆகிய ஹேஷ்டேக்குகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது.

இதன்மூலம் நேர்கொண்ட பார்வை படத்தின் மீதான  தாக்கம் என்னவென்பதை அஜித் ரசிகர்கள்  நிரூபித்துள்ளனர்.