இந்திய அளவில் சாதனை படைத்த அஜித்தின் ‘விஸ்வாசம்! உற்சாகத்தில் தல ரசிகர்கள்!

 

இந்திய அளவில் சாதனை படைத்த அஜித்தின் ‘விஸ்வாசம்! உற்சாகத்தில் தல ரசிகர்கள்!

மே 1-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ‘விஸ்வாசம்’ திரைப்படம், டிஆர்பி-யில் புதிய சாதனை படைத்துள்ளது.

சென்னை: மே 1-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ‘விஸ்வாசம்’ திரைப்படம், டிஆர்பி-யில் புதிய சாதனை படைத்துள்ளது. 

சிவா- அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக உருவான படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் தம்பி ராமையா, யோகி பாபு, ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குடும்ப கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

விஸ்வாசம்

தந்தைக்கும், மகளுக்கும் இடையேயான இந்த படம் உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி மாலை முதன் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பானது.

ajith

அன்று தல அஜித்தின் பிறந்த நாள் என்பதால் அந்த படத்தை காண ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது. அப்போது ஒளிபரப்பப்பட்ட அந்த படம் டிஆர்பியில் 1,81,43,000 புள்ளிகளை பெற்றுள்ளது. அதன் மூலம் இந்திய அளவில் நம்பர் 1 என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதை தல ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

trp

இதற்கு அடுத்ததாக ‘பிச்சைக்காரன்’ – 17696 புள்ளிகள், ‘பாகுபலி 2’ – 17070 புள்ளிகள், ‘சர்கார்’ – 16906 புள்ளிகள் என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.