இந்திய அணிக்கு 338 ரன்களை இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து! தட்டித்தூக்குமா இந்தியா?

இந்திய அணிக்கு 338 ரன்களை இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து! தட்டித்தூக்குமா இந்தியா?

இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு 338 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு 338 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோரகன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் விஜய் சங்கர் இடம்பெறவில்லை. விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து மொயின் அலி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக லியாம் பல்கன்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜானி பேரிஸ்டோவ் களமிறங்கினர். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வீரர்களில் பேர்ஸ்டோவ் 111 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 79 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.