இந்தியா மீதான தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை பாக்., பயன்படுத்தியது-முஷரப் ஒப்புதல்!

 

இந்தியா மீதான தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை பாக்., பயன்படுத்தியது-முஷரப் ஒப்புதல்!

இந்தியா மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை பாகிஸ்தான் உளவுத்துறை பயன்படுத்தியதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷரப் தெரிவித்துள்ளார்

இஸ்லாமாபாத்: இந்தியா மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை பாகிஸ்தான் உளவுத்துறை பயன்படுத்தியதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷரப் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும், அதன் தலைவர் மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பான ஆதாரங்களை இந்தியா வழங்கியுள்ள போதிலும், அதனை பாகிஸ்தான் மறுத்து வருகிறது. மசூத் அசார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருவதாக பாகிஸ்தான் ராணுவ மேஜர் கபூர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய அரசு, மத்திய படைகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தியது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பிலும் தொடர்ந்து எல்லை புறங்களில் ஆயுத பிரயோகங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை பாகிஸ்தான் உளவுத்துறை பயன்படுத்தியதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷரப் தெரிவித்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தன்னை கொலை செய்ய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினர் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.