இந்தியா – நியூசிலாந்து முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது

 

இந்தியா – நியூசிலாந்து முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

வெல்லிங்டன்: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரின் ஐந்து போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை இந்தியா துவம்சம் செய்து தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, டி20 தொடரில் பெற்ற தோல்விக்கு இந்திய அணியை நியூசிலாந்து பழி தீர்த்தது. இந்த நிலையில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் இவ்விரு அணிகளும் மோதவிருக்கின்றன.

அந்த வகையில், முதல் டெஸ்ட் போட்டி நாளை வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 04: 00 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த டெஸ்ட் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். முன்னதாக நியூசிலாந்து லெவன் மற்றும் இந்திய அணிகள் பங்கேற்ற 3 நாள் பயிற்சி போட்டி சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் ஹனுமா விகாரி சதமடித்து அசத்தினார்.