இந்தியா தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: பாக்., பிரதமர் இம்ரான் கான்

 

இந்தியா தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: பாக்., பிரதமர் இம்ரான் கான்

இந்தியா தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்

இஸ்லாமாபாத்: இந்தியா தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த தாக்குதல் பாகிஸ்தானின் துணையோடு தான் அரங்கேறியுள்ளது. தீவிரவாத குழுக்களை அந்நாடு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக நாடுகளிடம் இருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியா ராணுவ ரீதியிலான தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எந்த ஆதாரங்களும் இல்லாமல் புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா குற்றம்சாட்டுகிறது. பாகிஸ்தான் மண்ணிலிருந்து, வன்முறை பரவுவதை ஒருபோதும் விரும்புவதில்லை. புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என ஆதாரம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா ராணுவ ரீதியிலான தாக்குதல் நடத்தினால் யோசித்துக் கொண்டிருக்காமல் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.