இந்தியா ஒற்றுமையாக இருக்க 22 மொழிகளும் ஆட்சி மொழியாக மாற வேண்டும்: வைகோ பேட்டி.

இந்தியா ஒற்றுமையாக  இருக்க 22 மொழிகளும் ஆட்சி மொழியாக மாற வேண்டும்: வைகோ பேட்டி.

அமித்ஷாவின் ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கைக்கு எதிராக, இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் 22 மொழிகளும் ஆட்சி மொழியாக மாற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். 

அமித்ஷாவின் ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கைக்கு எதிராக, இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் 22 மொழிகளும் ஆட்சி மொழியாக மாற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர், செப்டம்பர் 14 ஆம் தேதி ஹிந்தியை இந்திய மொழியாக அறிவித்தால் தான் உலக நாடுகளிடையியே இந்தியாவை அடையாள படுத்த முடியும் என்று கூறினார். இதற்கு பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

Vaiko

இந்நிலையில், இன்று சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ம.தி.மு.க கட்சியின் பொது செயலாளர் வைகோ, செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள 22 மொழிகளுமே ஆட்சி மொழியாக மாற வேண்டும் என்று கூறியுள்ளார். 

மேலும், தமிழகத்தின் மீதான ஹிந்தி திணிப்பை முறியடிக்க தி.மு.கவும், ஆ.தி.மு.கவும் செயல்பட்டு வருவதாக வைகோ தெரிவித்துள்ளார்.