இந்தியா இந்து நாடாக மாற வாக்களியுங்கள்- நடிகர் ராதாரவி!

 

இந்தியா இந்து நாடாக மாற வாக்களியுங்கள்- நடிகர் ராதாரவி!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, “370 சட்டத்திற்கு பிறகே இந்தியாவின் முழுமையான வரைபடம் வெளியாகி உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, “370 சட்டத்திற்கு பிறகே இந்தியாவின் முழுமையான வரைபடம் வெளியாகி உள்ளது. இதுநாள் வரை திராவிடத்தை சுவாசித்த நான் பிஜேபி மூலமாக தேசியத்தை சுவாசிக்க வந்திருக்கிறேன். எங்கிருந்தாலும் இந்துக்கள் என்ற எண்ணத்துடன் வாக்களியுங்கள் இந்த நாடு இந்து நாடாக வாக்களியுங்கள்.

குடியுரிமை திருத்த சட்டம் ஸ்டாலின் படித்து பார்த்திருந்தால் தெரியும் அவர் புரட்டி பார்த்தவர் தானே எப்படி தெரியும். திமுகவில் பல நல்லவர்களும் இருக்கின்றனர் . என்ன செய்வது தலைமை சரியில்லை. ஸ்டாலினுக்கு கிழக்கு மேற்கு தெரியவில்லை, அவர் நடிகரும் இல்லை அரசியல்வாதியும் இல்லை. பெரியார் சிலை உடைப்புக்கு காரணம் வீரமணி தான். வீரமணி உள்ளவரை திமுக உருப்படாது.

radharavi

திமுக கொள்கை பரப்பு செயலாளர் நயன்தாரா பற்றி பேசி விட்டேன் என்பதற்காக  என்னை கட்சியில் இருந்து தூக்கிவிட்டார்கள். எதிர்கட்சியினர் தான்  கொரோனா அவர்களுக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்றால் தேர்தலில் சரியாக ஓட்டு போடுங்கள்” என தெரிவித்தார்.