இந்தியா – ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: தடுமாறும் ஆஸ்திரேலியா; வெற்றியை நோக்கி செல்லும் இந்தியா!

 

இந்தியா – ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: தடுமாறும் ஆஸ்திரேலியா; வெற்றியை நோக்கி செல்லும் இந்தியா!

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுடன் 4 விக்கெட்டை இழந்திருந்தது. இதனால்  வெற்றி வாய்ப்பு இந்தியா பக்கம் வந்துள்ளது

-குமரன் குமணன்

ஆஸ்திரேலியா: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுடன் 4 விக்கெட்டை இழந்திருந்தது. இதனால்  வெற்றி வாய்ப்பு இந்தியா பக்கம் வந்துள்ளது.

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்கள்  எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள்  எடுத்தது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள்  எடுத்திருந்த போது மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்தது.

india

நான்காம் நாளான இன்று அரை மணி நேரம் முன்னதாக தொடங்கிய ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய புஜாரா ரஹானே இணை நேற்று சேர்த்த 4 ரன்களுக்கு பின் மேலும் 83 ரன்கள்  சேர்த்தது . புஜாரா 71(204 ) 9×4 ) ரன்கள்  சேர்த்த நிலையில் லியோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஃபிஞ்ச் கேட்ச் பிடித்தார். அடுத்த சில ஓவர்களிலேயே ரோஹித் ஷர்மா 1(6) ஆட்டமிழந்தார். லியோன் பந்துவீச்சில் இரண்டாம் முறையாக ஆட்டமிழந்தார் ரோஹித் .அதற்கு காரணமானது ஹேன்ட்ஸ்கோம்ப் அருகிலிருந்தே பிடித்த கேட்ச்.

அடுத்ததாக வந்த ரிஷப் பண்ட் சற்றே அதிரடி காட்டினாலும் ,தேவையற்ற நேரத்தில் தூக்கியடித்து 28 (16) 4×4 1×6 ) ரன்களில் ஆட்டமிழந்தார்.மார்கஸ் ஹாரிஸ் பிடித்த கேட்சின் மூலம் இந்த விக்கெட்டும் லியோன் வசமானது .அப்போது இருந்த ஸ்கோர் 282/6 .அதன் பிறகு அஷ்வின் 5(18) ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்த போது ஸ்கோர் 302/7 .அடுத்தடுத்த மற்ற மூன்று பேட்ஸ்மேன்களாக ரஹானே 70(147) ஸடார்க்கிடம் கேட்ச் ஆகி லியோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே ஷமி தூக்கியடித்து ஹாரிஸிடம் கேட்ச் ஆகி போனார் . 15 பந்துகள் வரை ரன் எடுக்காமல் தாக்குப்பிடித்த இஷாந்த் சர்மாவை ஃபிஞ்ச் கேட்ச் மூலம் ஸ்டார்க் வீழ்த்த கடைசி 4 விக்கெட்டுகளை 4 ரன்களில் பறிகொடுத்துச் சுருண்டது இந்திய அணி. லியோன் 6 விக்கெட்களும் ,ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் ஹேஸில்வுட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 322 ரன்கள்  முன்னிலை பெற்றதன் மூலம் இந்தியாவால் ஆஸ்திரேலியாவுக்கு 323 ரன்கள்  இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

india

மாபெரும் இலக்கைத் துரத்த தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது பந்திலேயே அதிர்ச்சி தொடக்கம் நடந்திருக்க வேண்டியது. அவுட் கொடுக்கப்பட்ட ஒரு எல்.பி்.டபிள்யூ எதிர்த்து ஃபிஞ்ச் முறையிட, ரீப்ளோயில் இஷாந்த் வீசியது நோ பால் எனத் தெரிய வந்ததால், இரண்டாம் முறையாக ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழப்பதிலிருந்து தப்பி பிழைத்தார் ஃபிஞ்ச்.

ஆனால் ஸ்கோர் 28 ரன்களாக இருந்தபோது அஷ்வின் வீசிய பந்தை பண்ட் கேட்ச் பிடிக்க வெளியேறினார் ஃபிஞ்ச். ரீப்ளே பந்து கையுறை ,பேட் என எதிலுமே படவில்லை எனக் காட்டியது. டி.ஆர்.எஸ் பயன்படுத்தியிருந்தால் முடிவு மாறியிருக்கும். மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த மார்கஸ் ஹாரிஸ் ,ஷமி பந்துவீச்சில் பண்ட் கேட்ச் மூலம் 26(49 ) ரன்களில் ஆட்டமிழந்தார்.

india

முதல் இன்னிங்ஸில் 6 கேட்சுகள் பிடித்ததின் மூலம் ,தோனியின் 9 ஆண்டுகளுக்கு முந்தைய தேசிய சாதனையைச் சமன் செய்த பண்ட் (தோனி ,வெலிங்டன் நகரில் நியூசிலாந்துக்கு எதிராக 2009ல் ஒரு இன்னிங்ஸில் 6 கேட்சுகள் பிடித்திருந்தார் ) பண்ட் இதுவரை இந்த ஆட்டத்தில் எட்டு பேரை ஆட்டமிழக்கச் செய்ததில் பங்கெடுத்துள்ளார். இன்னும் மூன்று பேரை வீழ்த்தினால் ,ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக டிஸ்மிஸல் செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சிறப்பை பெறுவார். தற்போதைய இந்திய அளவிலான சாதனை ,விரித்திமான் சாஹாவிடம் உள்ளது (10 கேட்சுகள் ,தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ,கேப்டவுன் ஜனவரி 2018)

Australia

இதன் பிறகு உஸ்மான் க்வாஜா 8 ரன்கள்  மட்டுமே எடுக்க 41 பந்துகளை எதிர்கொண்டிருந்த நிலையில் 42ஆம் பந்தை மேல் நோக்கி  அடிக்க முடியவில்லை. அது வேறொரு திசையில் சென்று ரோகித் ஷர்மாவிடம் புகுந்தது.மீண்டும் அஷ்வினிடம் வீழ்ந்தார் க்வாஜா. இன்னொரு பக்கம் நிலைத்து ஆடிய ஷான் மார்ஷுக்கு துணை நிற்பார் எனக் கருதப்பட்ட பீட்டர் ஹேன்ட்ஸகோம்ப், ஒரு புல் ஷாட் ஆடும் முயற்சியில் மிட் விக்கெட் திசையில் தனியே நின்ற புஜாராவிடம், ஷமி வீசிய பந்தை அடித்து 14(40) ரன்களில் வெளியேறினார்.

Australia

ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49 ஒவர்களில் 104 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஷான் மார்ஷ் 31 (92) ரன்களுடனும் ஹெட் 11(37) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கடைசி நாளான நாளை, வெற்றி பெற ஆஸ்திரேலிய அணிக்கு 219 ரன்கள்  தேவைப்படும் நிலையில், இந்தியாவுக்கு 6 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்பதால் , போட்டியில் வெற்றியும் தொடரில் முன்னிலையும் பெற பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது.