இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்: வீரர்களின் பட்டியலை வெளியிட்டது கிரிக்கெட் வாரியம்! வெளியேற்றப்பட்ட முன்னணி வீரர்கள்!

 

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்: வீரர்களின் பட்டியலை வெளியிட்டது கிரிக்கெட் வாரியம்! வெளியேற்றப்பட்ட முன்னணி வீரர்கள்!

இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் ஆடவிருக்கும் ஆஸ்திரேலிய அணி இன்று வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 7 முக்கிய வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முடிவுற்ற பிறகு, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வருகிறது இதற்கான ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

அதில் ஏழு முக்கிய வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கின்றனர். மனநலம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய மேக்ஸ்வெல் இந்த தொடரிலும் இடம்பெறவில்லை. 

ODI squad

கடந்த முறை இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணிக்கு, ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடிய துவக்க வீரர் கவாஜா நீக்கப்பட்டு, டெஸ்டில் அசத்திய லாபுசானே ஒருநாள் போட்டிக்கான அணியில் முதல் முறையாக இடம் பெற்றிருக்கிறார்.

உலக கோப்பையில் பங்கேற்ற வேகப்பந்து வீச்சாளர் கொல்டர் நைல், சூழல்பந்து வீச்சாளர் நாதன் லயன், ஆல்ரவுண்டர் ஆகிய மூவரும் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கின்றனர்.

இவர்களுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் அபோட், ஆஸ்டன் அகர் ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா வரவிருக்கும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல்:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மார்னஸ் லபுசானே, ஸ்டீவ் சுமித், ஆஸ்டன் டர்னர், கானே ரிச்சர்ட்சன், அலெக்ஸ் கேரி, அபோட், ஆஸ்டன் அகர், கம்மின்ஸ், ஹேண்ஸ்ஹோம், ஹாசில்வுட், ஸ்டார்க், ஆடம் சம்பா.