இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மகள் பி.வி.சிந்து: குவியும் வாழ்த்து!

 

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மகள்  பி.வி.சிந்து: குவியும் வாழ்த்து!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று பி.வி.சிந்து வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

சுவிட்சர்லாந்து:  உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று பி.வி.சிந்து வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை பி.வி.சிந்துவுக்கு கிடைத்துள்ளது. 

sindhu

பி.வி.சிந்துவின் இந்த வெற்றியை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி,  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

pvsindhu

அதே போல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  சிந்து அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார். அவரை தொடர்ந்து  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக  மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் சிந்துவிற்கு தங்கள் வாழ்த்துகளைத்  தெரிவித்துள்ளனர். 

sindhu

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிந்துவிற்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், வரும் காலங்களில் பல்வேறு வெற்றிகளைப் பெற வேண்டும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரை தொடர்ந்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட  பல்வேறு அரசியல் தலைவர்களும் பி.வி.சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.