இந்தியாவில் 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்பு; மின்சார ரிக்க்ஷா அறிமுகம் – அமேசானின் அசத்தல் திட்டம்!

 

இந்தியாவில் 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்பு; மின்சார ரிக்க்ஷா அறிமுகம் – அமேசானின் அசத்தல் திட்டம்!

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்திய இ-காமர்ஸ் சந்தையில் அமேசான் நிறுவனமானது அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் இந்நிறுவனத்தின் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சலுகை மிகவும் பிரபலமான ஒன்றாகும். சமீபத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்தார். அதைக் கண்ட அனைவரும் மிகவும் ஆச்சர்யம் அடைந்தனர். கருப்பு நிறத்திலான டெலிவரி ரிக்க்ஷாவை பெசோஸ் உற்சாகத்துடன் ஓட்டிச் செல்லும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

 

அந்த ரிக்க்ஷாக்கள் அனைத்தும் மின்சாரத்தால் இயங்கக் கூடியவை ஆகும். அதாவது இ-ரிக்க்ஷாக்கள் ஆகும். இவற்றால் கார்பன் வெளியீடு என்பது அறவே இருக்காது. இதனால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த ரிக்க்ஷா உருவாக்கப்பட்டுள்ளது. டெலிவரிகளை எளிமையாக்கும் நோக்கில் இவற்றை அறிமுகம் செய்திருப்பதாக பெசோஸ் தெரிவித்துள்ளார். மேலும் இவற்றின் மூலம் இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதுதவிர இந்தியாவில் சிறு வணிகத்திற்காக அமேசான் நிறுவனம் மேலும் ஒரு பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.