இந்தியாவில் 100 கோடி வசூல் சாதனை செய்த தி லைன் கிங்! 

 

இந்தியாவில் 100 கோடி வசூல் சாதனை செய்த தி லைன் கிங்! 

தி லைன் கிங் படம் இந்தியாவில் 100 கோடி மேல் வசூல் சாதனை செய்துள்ளது. 

இந்தியாவில் 100 கோடி வசூல் சாதனை செய்த தி லைன் கிங்! 

சென்னை: தி லைன் கிங் படம் இந்தியாவில் 100 கோடி மேல் வசூல் சாதனை செய்துள்ளது. 

கடந்த 1994ம் ஆண்டு வெளியான தி லயன் கிங் படத்தை மீண்டும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி ரீமேக் செய்யப்பட்டுக் கடந்த 19ம் தேதி வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான இந்த படம் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் வரை ரசித்துப் பார்த்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் இதன் மூலம் இந்தியாவில் ரூ.100 கோடி வசூல் செய்து 4-வது ஹாலிவுட் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. 

இந்த படம் வெளியான முதல் வாரத்தில் 81 கோடியும், இரண்டாவது வாரத்தில் 32 கோடியும் வசூல் செய்துள்ளது.முன்னதாக தி ஜங்குள் புக், அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.