இந்தியாவில் ஹானர் பேண்டு 4 ரன்னிங் எடிஷன் ஃபிட்னஸ் டிராக்கிங் சாதனம் நாளை விற்பனைக்கு வெளியாகிறது!

 

இந்தியாவில் ஹானர் பேண்டு 4 ரன்னிங் எடிஷன் ஃபிட்னஸ் டிராக்கிங் சாதனம் நாளை விற்பனைக்கு வெளியாகிறது!

ஹானர் நிறுவனம் தனது தயாரிப்பான ஹானர் பேண்ட் 4 சாதனத்தை அமேசான் தளத்தில் பிப்.25-ஆம் தேதி அறிமுகம் செய்கிறது.

டெல்லி: ஹானர் நிறுவனம் தனது தயாரிப்பான ஹானர் பேண்ட் 4 சாதனத்தை அமேசான் தளத்தில் பிப்.25-ஆம் தேதி அறிமுகம் செய்கிறது.

ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் நிறுவனம் தனது ஹானர் பேண்டு 4 ரன்னிங் எடிஷன் ஃபிட்னஸ் டிராக்கிங் சாதனத்தின் விற்பனையை பிப்.25-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்க உள்ளது. இதன் விலை ரூ.1,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லாவா ரெட் மற்றும் பச்சை நிறங்களில் இந்த சாதனம் வெளியாகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சை கை மற்றும் கால்களில் கட்டிக்கொள்ள முடியும்.

முன்னணி தடகள பயிற்சியாளர்கள், ஓட்டப்பந்தய வீரர்கள், வாக்கிங் மற்றும் ஜாகிங் செல்வோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த ஹானர் பேண்ட் 4 சாதனத்தில் 0.5 இஞ்ச் ஓலெட் திரை மற்றும் 77 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 5ஏடிஎம் வாட்டர் ப்ரூஃப், நோட்டிபிகேஷன் வசதிகள் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.