இந்தியாவில் யாரும் செய்யாததை நான் செய்ய விரும்பினேன்: WWE போட்டியில் கால்பதித்த கவிதா தேவி பேட்டி

 

இந்தியாவில் யாரும் செய்யாததை நான் செய்ய விரும்பினேன்: WWE போட்டியில் கால்பதித்த கவிதா தேவி பேட்டி

இந்தியாவில் யாரும் செய்யாததை நான் செய்ய விரும்பினேன் என WWE போட்டியில் கால்பதித்த கவிதா தேவி the quint பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்தியாவில் யாரும் செய்யாததை நான் செய்ய விரும்பினேன் என WWE போட்டியில் கால்பதித்த கவிதா தேவி the quint பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.

WWE போட்டியில் கால்பதித்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் ஹரியான மாநிலத்தை சேர்ந்த கவிதா தேவி. இவர் சர்வதேச பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தவர். இந்தியா சார்பாக சல்வார் கமீஸ் அணிந்து wwe போட்டியில் பங்கேற்கும் இவர், தன் நீண்ட பயணம் பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

The quint பத்திரிகைக்கு பேட்டியளித்த கவிதா, நான் பளு தூக்கும் வீராங்கனையாக என் பயணத்தை துவங்கினேன். சர்வதேச பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று தந்தாலும் எனக்கு அது திருப்தி அளிக்கவில்லை. இந்தியாவில் யாரும் செய்யாததை நான் செய்ய விரும்பினேன், அதனால் WWE போட்டியில் வாய்ப்பு கிடைத்ததும் தாமதிக்காமல் ஒப்புக் கொண்டேன். என்னுடைய பயணம் போராட்டம் நிறைந்தது, தற்போது இந்தியாவை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கிற பிரதிநிதியாகும் வாய்ப்ப்பு கிடைத்துள்ளது. என் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக சல்வார் கமீஸ் அணிந்து போட்டிகளில் கலந்து கொள்கிறேன். இந்தியாவுக்கு சாம்பியன்ஷிப் பெல்ட் பெற்றுத் தருவதே என் லட்சியம் என தெரிவித்துள்ளார்.