இந்தியாவில் முதல் முறையாக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகையை வாரி வழங்கிய கேரள அரசு..!

 

இந்தியாவில் முதல் முறையாக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகையை வாரி வழங்கிய கேரள அரசு..!

பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பகுதியான மகப்பேறு காலத்தின் போது பெண்களால்  வேலை செய்வதற்கு சிரமமாக இருக்கும்.வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை சொல்ல வேண்டியதே இல்லை…

பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பகுதியான மகப்பேறு காலத்தின் போது பெண்களால்  வேலை செய்வதற்கு சிரமமாக இருக்கும்.வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை சொல்ல வேண்டியதே இல்லை…இவர்களின்  மகப்பேறு காலத்தைக் கருத்தில் கொண்டு, 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை அளிக்கும் மகப்பேறு நலச் சட்டம், தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களில் உள்ள அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டும் நடைமுறையில் உள்ளது. தனியார்ப் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு மகப்பேறு காலத்தில் விடுமுறை அளிக்கப் பட்டாலும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. 

Maternity

இந்நிலையில், மகப்பேறு நலச் சட்டத்தைத் தனியார்ப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக் கேரள அரசு மத்திய அரசுக்கு அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளது. கேரள அரசின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு தனியார்ப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

Teachers

  

இதனையடுத்து, இந்தியாவிலேயே முதன் முறையாக, தனியார்ப் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் திட்டத்தைக் கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. அதன் படி, பெண்களின் மகப்பேறு காலத்தில் 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் குழந்தை பிறக்கும் வரை 1000 ரூபாய் உதவித் தொகையும் அளிக்கப் போவதாகக் கேரள அரசு தெரிவித்துள்ளது.